ஈஸ்ட் வாங்கி இப்படி யூஸ் பண்ணினா உங்க முடி நீளமா வளரும்!!

0
14

ஈஸ்ட் ஒரு நுண்ணுயிர். பிரட், பிஸ்கட் போன்ற பேக்கிங் உணவுவகைகளை செய்வதற்கு பயன்படுத்துகிறார்கள்.
உணவு வகைகள் மட்டுமன்றி, சரும மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கும் ஈஸ்ட் நல்ல
பலன்களை தருகின்றது.

ஈஸிட்டில் அதிக ஃபோலிக் அமிலம் இருப்பதால், முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. முடியின் வேர்கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் வேர்க்கால்கள் பலப்படுத்தப்பட்டு முடிஉதிர்வினை கட்டுப்படுத்த முடியும். புதிய முடிகள் விரைவில் உருவாகும்.

தொடர்ந்து பயன்படுத்தினால் ஓரிரு வாரங்களில் முடியின் நீளம் அதிகரிப்பதை காணலாம். அதனை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.

குறிப்பு- 1 :

தேவையானவை :
முட்டையின் மஞ்சள் கரு – 2
ஈஸ்ட் – 1 ஸ்பூன்
தேன்- 1 டேபிள் ஸ்பூன்

முதலில் முட்டையின் மஞ்சள் கருவை நன்றாக க்ரீம் பதத்திற்கு அடித்துக் கொள்ளுங்கள். அதனுடன் தேன், ஈஸ்ட் போன்ற்றவற்றை கலந்து கொள்ள வேண்டும்.

உங்கள் தலைமுடியை ஈரப்படுத்துங்கள். பின்னர் இந்த கலவையை உங்கள் முடியின்
வேர்கால்களில் நன்றாக படுமாறு தடவ வேண்டும். 20 -30 நிமிடங்கள் கழித்து
தலைமுடியை அலசுங்கள். வாரம் இரு நாட்கள் செய்து பாருங்கள்.

குறிப்பு -2

ஈஸ்ட் – 1 டீஸ்பூன்
கற்றாழை – 4 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்

மேலே சொன்ன 3 பொருட்களையும் ஒன்றோடொன்று கலந்து க்ரீம் பதத்திற்கு கொண்டு வாருங்கள். இதனை தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து தலைமுடியி அலச வேண்டும். வாரம் ஒருமுறை செய்தால் நல்ல பலனைக் காண்பீர்கள்.

SHARE