ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய சட்டங்கள்!

0
685

பெண் பொருளாதார மேம்பாடு பற்றிய சட்டங்கள்:
வரதட்சணை ஒழிப்பு சட்டம் 1961 – வரதட்சணை கொடுப்போரையும் வாங்குபவரையும் தண்டிக்கும் சட்டம் .

தண்டனை – 5 வருட சிறைத் தண்டனை; 15000 ரூபாய் அபராதம்.

இச்சட்டம் பெரும்பாலான மணமான பெண்களை வரதட்சணை சாவிலிருந்து காப்பற்றி வருகிறது. பெண்களுக்கு வரதட்சிணை கொடுக்கும் மாறினால் அவர்களை ஒரு சுமையாக பெற்றோர் கருத மாட்டார்கள்.

இந்திய வாரிசுகளாக்கும் சட்டம், 1925 (1925 39)
-மனைவியையும்,பெண் குழந்தைகளையும் வாரிசுகளாக்கிய சட்டம்
குறைந்தபட்ச கூலி சட்டம் – ஆண்களுக்கு சமமான (வேலைக்கான) ஊதியம் -தினசரி 5 மணி நேர வேலைக்கு ரூ 85 ஊதியம்.

தொழிற்சாலைகள் சட்டம், 1948
தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காக உருவான இச்சட்டம் மகளிர் நலத்தையும் குறிப்பிடுகிறது . சம ஊதியம் சட்டம், 1976 -வேலைவாய்ப்பு விஷயத்தில் பெண்களுக்கு எதிரான, பாலியல் அடிப்படையில் பாகுபாடுஇல்லாது ஆண்கள் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு சம ஊதியம் வழங்கும் நோக்கம் கொண்டது.
பெண் சமூக மேம்பாடு பற்றிய சட்டங்கள்.

சதி (தடுப்பு) சட்டம், 1987
இந்துமத சடங்கான சதி என்னும் விதவைகளை இறந்த கணவனின் உடலோடு எரித்தல் ,சதிகளுக்கு கோவில் கட்டி வணங்குதல் போன்ற மூட பழக்கங்களை அறவே அழிக்க உதவும் இச்சட்டம் ,இதை மீறுவோருக்கு ஒரு வருட கால சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனையாக வழங்கப் படும்.

பெண்களை அநாகரிகமாக காட்டுவதை தடை செய்யும் சட்டம் 1986:
மகளிரை வர்த்தக விளம்பரங்களிலும் ,ஊடகங்களிலும் மரியாதை குறைவாக சித்தரிக்கும் முறையை தடை செய்ய வேண்டி இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
மீறினால் முதல் குற்றத்திற்கு அதிக பட்சமாக 2 ஆண்டு சிறையும்,2000 ரூபாய் அபராதம் ,இரண்டாவது குற்றத்திற்கு அதிக பட்சமாக 5
ஆண்டுசிறையும்,10,000 ரூபாய் அபராதம் வழங்கப் படும்.

குழந்தை திருமண கட்டுப்பாடு சட்டம், 1929
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டது.
பதினெட்டு வயதுக்கு கீழே உள்ள பெண்களுக்கு மணம் செய்தல் கூடாது .

இந்து மதம் தத்து எடுத்தல் & பராமரிப்பு சட்டம், 1956 – ஒரு இந்து மதத்தை சார்ந்த மனைவியையும் ,குழந்தையையும் தன்வாழ்நாள்
காலம் முழுவதும் அவரது கணவரால் பராமரிக்கப் படும் உரிமையை இந்த சட்டம் தருகிறது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்