பெண்களுக்கு சல்யூட் போட வைத்த 8 தமிழ்ப்படங்கள்!

0
443

பெண்களை மையப்படுத்தி வரும் படங்கள் நிச்சியம் சமூகத்தில் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தாமல் இல்லை. நம் சமூக மாற்றத்தையும், பெண்களை பற்றிய புரிதலும் ஏற்படுத்தியது சினிமா தான். தமிழ் சினிமாவில் மிக முக்கிய பெண்களை குறித்த படங்கள் இவை.

அருவி:
சென்ற ஆண்டு வெளியான படங்களில் மிகவும் முக்கியமான படமாக உள்ளது. விருதுகளை குவித்த இப்படம் சமூத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கபட்ட பெண் எப்படி புறக்கணிக்கபடுகிறாள் என அவள் மீது பாலியல் ரீதியன வன்முறைக்கு ஆளாக்கபடுகிறாள் என்பதை தோலுரித்து காட்டிய படம்.

அறம்:
பெண்கள் நேரடி அரசியல் பேசும் படங்கள் தமிழ் சினிமாவில் வருவது அபூர்வமான ஒன்றாக தான் உள்ளது. அப்படி பெண் கலெக்டராக வரும் நயன்தாரா குழியில் விழுந்த குழந்தையை காப்பாற்ற போராடும் நேர்மையான அதிகாரியாக பற்றிய படம் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

மகளிர் மட்டும்:
ஜோதியா சரண்யா ஊர்வசி பானுப்ரியா நடித்த படம் பெண்களின் வாழ்வியலையும் பெண்கள் மீது நடத்தப்படும் ஆணாதிக்க சிந்தனை எடுத்துக்கூறிய படம். பெண்களை சமமாக நடப்படவேண்டும் என்ற ஒரு முக்கிய கருத்தை சமூகத்திற்கு உரக்க ஒலித்தப் படம்.

இறுதிசுற்று:
குத்துசண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படாக இருந்தாலும் விளையாட்டு துறைகளில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் கொடுமைகளையும் எடுத்து சொன்னப்படம்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்