திருமணமான பெண்ணிற்கு வேறொருவனிடம் காதல் வருவதற்கு காரணம் என்ன?

0
14

எல்லா காதலும் திருமணத்தில் முடிவதில்லை. அப்படியே முடிந்த காதல் மணங்களில்
எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. எல்லா பெற்றோர்
பார்த்த திருமணமும் காதல் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அவர்களுக்குள் விரிசல் வராமலில்லை.குழப்பமா இருக்கா? கல்யாண வாழ்க்கையே பலருக்கும்
குழப்பம்தாங்க.

காதல் திருமணமாகட்டும், பெற்றோர் நிச்சயித்த திருமணமாகட்டும். கல்யாணம் ஆன
பிறகு எல்லாம் ஒன்று போலத்தான்.பிரிந்து இருக்கும்போது இனித்த காதல் அருகருகே இருக்கும்போது ஒன்று திகட்டி விடுகிறது. இல்லையென்றால் கசந்துவிடுகிறது.

திருமணம் ஆன பின் ஆணோ, பெண்ணோ இரு துருவங்களாகி விடுகிறார்களா?
இல்லையே… அவர்கள் பிறந்ததிலிருந்தே அப்படித்த்தான். இருவேறு துருவங்கள்தான். அவர்களை ஒரே புள்ளியில் இணைக்கும் காந்தம்தான் காதல். அந்த காதல் இல்லாமல் இருந்தால்தான் எல்லாமே பிரச்சனைக்குரியதாகிவிடுகிறது.

எப்பவும்  கணவன் மனைவிக்கிடையே சச்சரவு வரவில்லையென்றால், அவர்கள் பொய்ய்யாக வாழ்கிறார்கள் என்று அர்த்தம்.

சின்ன சின்ன சண்டைகளோடு முட்டிக் கொண்டு நிற்கும்ப்போது கணவன்
சாப்பிடவில்லையென்றால், மனைவி உறுத்தலோடும், மனைவி அழுதால், கணவன்
தாங்க முடியாமலும், அதற்குப் பின் வரும் சமாதானமும் ஒர் அழகியல். வாழ்வைப்
பற்றி உங்கள் அடுத்த சந்ததிதிக்கு சிறு புரிதலோடு சொல்லப்படுகிறதுதான் நல்ல
தாம்பதியம். நிற்க.. பிரச்சனைக்கு வருவோம்.

இதில் மூன்றாம் நபர் யார்.? அவர் எப்படி இந்த தாம்பதிய வாழ்வில் நுழைகிறார்?
இதற்கெல்லாம் காரணம் என்னவாக இருக்கும்?

அந்த மூன்றாம் நபர் ஆணைச் சார்ந்தவராக இருக்கலாம் அல்லது பெண்ணைச்
சார்ந்தவராக இருக்கலாம். இந்த கட்டுரையில் ஒரு பெண்ணிற்கு ஏன் வேண்டாத உறவு
திருமணம் ஆன பின் வருகிறது என்பதை மட்டும் சொல்கிறோம். தொடர்ந்து படியுங்கள்.

கல்யாணம் பற்றிய கற்பனை ;

பெரும்பாலான பெண்கள் மணமான பின் தனது வாழ்க்கை இப்படியெல்லாம் இருக்கும்
என்று அதீத கற்பனையோட் இருந்திருப்பார்கள். ஆனால் நிஜத்தில் அவள் எதிர்பார்த்தது
போலில்லாமல் இருக்கும்போது, வேறொருவனிடம் காதல் தோன்றுகிறது.

த்ரில் :

சிலருக்கு ஒரே மாதிரி எழுந்து ஒரே மாதிரி வேலைகளைச் செய்து, ஒரே முகத்தைப்
பார்த்து இப்படி அலுத்துப் போகும் வாழ்க்கையில் த்ரில் வேண்டுமே என்று
வேறொருவனிடம் காதலில் விழுவதுண்டு. ரகசியமாக அவனுடம் பகிரப்படும் அந்தரங்க விஷய்ங்கள் அவளுக்குள் ஒரு த்ரில்லை தருகின்றது.

கடமைக்கென செய்யும் கணவன் :

தனது கணவன் அவளுடன் உணவு பூர்வமாக பிணைக்கபடவில்லையென்றால்,
ரொமண்டிக்காக இல்லாமல் , அன்பு பரிமாறாமல், குறும்புகள், பரிசுகள், உடல் நலம்
சரியில்லாத போது அவள் மீது அக்கறைஉ கொள்ளாமல் இப்படி எதுவுமில்லாமல், எந்த
அன்பும் பகிராமல், கடமைக்கு செய்ய வேண்டும் என்று இருக்கும் கணவர்கள்
அமைந்தால், அவள் வேறொருவனிடம் அன்பையோ, அக்கறையையோ தேடுவாள்.

மரியாதை, மதிப்பளிப்பு :

தனக்கு மதிப்பளிக்காமல், மரியாதை இல்லாமல் அவளை நடத்தினால், அவன் மீது
சற்றும் அவளுக்கு காதல் வராது, சின்ன சின்ன விஷயத்திற்கும், கோபத்தில் சட்டென
கையோங்கும் ஆணை எந்த பெண்ணும் விரும்ப மாட்டாள். இதனால் வேறொருவன் மீது காதல் வருகிறது.

செக்ஸ் :

இதனை இரண்டு விதமாகச் சொல்லலாம். தனது கணவனுக்கு செக்ஸ் ஆசையே
இல்லாமல் இருந்தால்,அவளுக்கு வெறொருவன் மீது அந்த ஆசையினால் மட்டுமே
மையம் வரும்.

இன்னொன்று பாலியல் வன்முறை. மனைவி என்பதற்காக அவளுக்கு
விருப்பமில்லையென்றாலும் அவளைக் கட்டயப்படுத்தி தனது இச்சையை தினமும்
முடித்துக் கொள்பவனிடமிருந்து ஒரு பெண் உணர்வுபூர்வமாக விடுபட்டு, அன்பையும்,
காதலையும் மட்டுமே எதிர்பார்த்து வேறொருவனிடம் காதல் கொள்கிறாள்.

பழிக்கு பழி :

தனது கணவன் வேறோரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருந்தால், அதனை கண்டிக்க
இயலாமல் அவனை பழி வாங்க வேண்டும் என்பதற்காக வெறொருவனிடம் தொடர்பு
கொள்கிறாள்.

உங்களுக்கும் இதனைப் பற்றி பலக் கருத்துக்கள், விமர்சனங்கள் இருந்தால் நீங்கள் முன்வைக்கலாம்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்