சூரிய கிரகணத்தின் போது ஏன் தர்ப்பைப் புல்லை உணவுப் பாத்திரத்தில் இடுகிறோம் தெரியுமா?

0
11

தர்ப்பை புல்லில் தாமிர சத்து அதிக அளவில் நிரம்பி இருப்பதால், அது சிறந்த ஆற்றலை கடத்தும் சாதனமாக அறியப்படுகிறது. விஞ்ஞான வளர்ச்சியில் மின் கம்பிகளில் தாமிர கம்பிகளையே பயன்படுத்துகிறரகள். காரணம் அவை வேகமாக அலைவரிசைகளை கட்டத்துகின்றன.

அத்தகைய தாமிரம் அதிகம் கொண்ட தர்ப்பைப் புல்கள் உங்கள் ஆற்றலை மற்றும் நேர்மறை சிந்தனைகளை அலைவரிசையை வேகமாக கடத்துவதால் காரிய சித்தி ஏற்படும். மனதில் நினைப்பவை பலிக்கும் என்பதால் கோவிலில், பூஜைகளில், கும்பாபிஷேகம் என எல்லாவற்றிற்கும் தர்ப்பைப் புல்லை பயன்படுத்துகிறோம்.

பொதுவாக தர்ப்பைப் புற்கள் ஆற்றங்கரை மற்றும் மலையோரங்களில் வளரும் தன்மைகொண்டது. நீர் மிக மிகக் குறைந்த அளவே தேவைப்படும் தாவரம்.

சூரிய கிரகணத்தின் போது :

சூரிய கிரகணம் ஏற்படும்போது வீட்டிற்குள் தர்ப்பை புல்லை உணவுப் பாத்திரங்களில் வைப்போம். அந்த நேரங்களில் வெளிப்படும் சூரியனின் தீமையான கதிர்களின் தாக்கத்தால், உணவுப் பொருட்கள் கெட வாய்ப்புண்டு.அதனை தடுக்கவே தர்ப்பைப் புல்லை பாத்திரத்தில் இடுகிறோம், இதனாலேயே, கிரகண நேரத்தில் உணவு அருந்தக்கூடாது என்பதற்கும் இதுதான் காரணம்.

நோய் தீர்க்கும் :

தர்ப்பை புல் இட்ட நீரை வீட்டில் தெளித்து வந்தால் எந்த தொற்று வியாதியும் அணுகாது. மழைக்காலத்தில் நீர்த் தொட்டிகளில் தர்ப்பைப் புல்லை போட்டு வைத்தால் மழைக்கால நோய்கள் உங்களை அணுகாது.

பவித்ரம் :

பொதுவாக பூஜை புனஸ்காரத்தின் போது பவித்ரம் எனும் தர்ப்பை புல்லை மோதிரம் போல் அணிந்து பூஜை செய்வது இந்து மதத்தில் கட்டாயம். அப்படி கை விரலில் அணியாமல் பூஜை சடங்குகள் செய்தால், மின்சாரம் இல்லாத கணினி போல், எந்த பலன்களும் கிடைக்காதாம்.

தொற்று வியாதிகளை தடுக்க :

வீடுகளில், உயரமான இடங்களில், வாசல்களில் கொத்தாக தர்ப்பை புல்லை கட்டிவைக்க, எந்தவித தொற்று பாதிப்புகளும் அணுகாமல்
இருக்கும். வியாதி உள்ளவர்கள் தங்குமிடங்களில் தர்ப்பை புல்லை வைக்க, வியாதிகள் பரவாது, நலம் பெறுவர்.

பாய் :

தர்ப்பை புல்லில் உள்ள தாமிர சக்தியின் ஆற்றலை உடலில் பரவச் செய்ய, இந்த தர்ப்பை பாயை நாமும் வாங்கி, தியானம் செய்யலாம்.
மன உளைச்சல், மன வியாதி குணமாகி, மன அமைதி உண்டாகும்.

தர்ப்பை பாயில் படுத்து உறங்கிவந்தால், உடல் சூடு குறையும். நல்ல நிம்மதியான உறக்கம் உண்டாகும்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்