ஏன் பெண்கள் மட்டன் அதிகம் சாப்பிடக் கூடாது என தெரியுமா?

0
83

மட்டன் அதிகம் விரும்பி சாப்பிடுவர்கள் இருக்கின்றனர். பலருக்கு மட்டன்
இல்லையென்றால் உணவு உள்ளே போகாது. வாரத்தில் நான்கு நாட்கள் கூட மட்டன்
சாப்பிடுபவரகள் உண்டு.

சமீப அராய்ச்சியில் மட்டன் பெண்கள் சாப்பிடுவதால் உண்டாகும் பின்விளைவுகளைக்
கண்டு அதிர்ந்திருக்கிறார்கள். அதனைப் பற்றி அவசியம் விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். இதனால் நீங்கள் முனெச்சரிக்கையாக இருக்க உதவும்.

குழந்தையின்மை :

பெண்களுக்கு எண்டோமெட்ரியோஸிஸ் என்னும் நோய் அதிகம் தககும் வாய்ப்புள்ளது.
கருப்பை, உட்சுவர் , கருக்குழாய் போன்றவற்றில் உருவாகும் அதிகப்படியான திசுக்களின் வளர்ச்சியே ஆகும். இதனால் அதிக ரத்தப் போக்கு, உடல் பலவீனம், தலைசுற்றல் உண்டாகும். கருத்தரிப்பின்மைக்கு முக்கிய காரணம் எண்டோமெட்ரியோஸிஸ்.

குறிப்பாக அமெரிக்கா ஐரோப்பா நாடுகளின் பத்தில் ஒரு பெண்ணிற்கு இந்த பிரச்சனை
உண்டு. இதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்ததில் அதிகப்படியாக மட்டன்
சாப்பிடுவதால்தான் இந்த பாதிப்பு உண்டாகிறது என கண்டறிந்துள்ளனர்.

மட்டன் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்கச் செய்கிறது. அளவோடு
சாப்பிடும்போது எவ்வித கெடுதலும் இல்லை. ஆனால் தினமும் அல்லது அடிக்கடி மட்டன் எடுத்துக் கொள்வதால் குழந்தையின்மை உண்டாகும் என்று கூறுகிறார்கள். அது மட்டுமல்ல பலவித நோய்களும் உண்டாகின்றன.

மார்பக புற்று நோய் :

ஹார்வார்டு பல்கலைக்கழகம் செய்த ஆய்வில் அதிகம் மட்டன் சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என தெரிய வந்துள்ளது. மட்டனிற்கு பதிலாக புரதம் அதிகம் உள்ள சிக்கன், மீன், நட்ஸ் வகைகளிய சாப்பிடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மலக்குடல் புற்று நோய் :

இன்றைய காலத்தில் மசாலா மற்றும் அதிக கொழுப்பு உள்ள உணவுகள் சாப்பிடுபவர்களை தாக்கும் புற்று நோய்களில் மலக்குடல் புற்று நோயும் ஒன்று. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது புற்று நோய் இருந்தால், நீங்கள் மட்டன் சாப்பிடும் முன் யோசிப்பது நல்லது. ஏனென்றால் அதிகமாக மட்டன் சபபிடுவது மலக்குடல் புற்று நோய்க்கு வழிவகுக்கின்றது.

உடல் பருமன் :

நிறைய ஆய்வுகளில் கூறப்படுவது மட்டன் சாபிடுவதால் ஹரமோன் மாற்றங்களும், உடல் பருமனும் கண்டிப்பாக உண்டாகும் என்பதுதன. ஐரோப்பிய நாடுகளில் 30-40 வயதுகளில் இருக்கும் பெண்களின் உடல் பருமன் அதிகரித்து வருவதற்கு சிவப்பு இறைச்சியான மட்டன் என்று கூறுகின்றனர்.

ஆயுட்காலம் :

அதிகமாக மட்டன் சாப்பிடுவதால் கொழுப்புகள் எரிக்கபடாமலும், நச்சுக்கள்
வெளியேறப்படாமலும் உடலுக்குள்ளே இருந்து வயிற்றுப் புற்று நோய் உட்பட பல
நோய்களை தருவதால் ஆயுட்காலம் குறையும் என ஹார்வார்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE