ஆசிஃபாவை சீரழித்த கிழவன் இவன்தான்… என்ன தண்டனை கொடுக்கலாம்?

0
1803

நாடோடி மக்களை ரசானா பகுதியில் இருந்து விரட்டியடிப்பதற்காக அந்த இன மக்களின் குழந்தைகளில் ஒருத்தியான ஆசிஃபா என்ற சிறுமியை எட்டு நாட்களாக கட்டிவைத்து பலாத்காரம் செய்து கொலை செய்த கயவன்தான் இந்த புகைப்படத்தில் உள்ளவன். இவனது பெயர் சஞ்சிராம்.

ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் உள்ளது கசானா என்ற அழகிய கிராமம். ஆசிஃபாவின் குடும்பம் ஏழ்மையான குடும்பம்தான். குதிரை மேய்க்கும் தொழில் அவர்களது பரம்பரைத் தொழிலாக இருக்கிறது. வீட்டிலேயே குதிரை வளர்க்கிறார்கள். கடந்த ஜனவரி 10ம் தேதி ஆசிஃபா தான் செல்லமாக வளர்த்த குதிரையை அருகில் உள்ள குளக்கரைக்கு கூட்டிச் சென்றாள். சில நிமிடத்தில் அங்கே ஆசிஃபா மாயமானாள். குதிரை மட்டும்தான் மேய்ந்து கொண்டிருந்தது.

இவளது பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் எட்டு நாட்கள் போலீசார் தொடர்ந்து ஆசிஃபாவை தேடினர். பிறகு அவள் சடலமாகவே கண்டெடுக்கப்பட்டாள். பிரேத பரிசோதனையில் அவள் பல நபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, பின் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறியது மருத்துவ அறிக்கை. உடல் முழுவதும் காயங்கள், கீறல்கள், பற்களால் கடிக்கப்பட்டதன் தழும்புகள் காணப்பட்டன. மயக்க மருந்து கொடுக்கப்பட்டதற்கான தடயங்களும் கிடைத்துள்ளன. இதுதவிர உடலின் பல இடங்களில் தீக்காயங்கள் இருந்தன.

ஆசிஃபா கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறாள். குதிரை மேய்த்துக்கொண்டிருந்த அவளை தூக்கிச்சென்று, கோயிலின் கருவறைக்குள் கட்டிவைத்து மூன்று நாட்களாக பலாத்காரம் செய்துள்ளனர். மயக்க மாத்திரைகள் கொடுத்தும், உடம்பில் சூடு போட்டும் அவளை வன்புனர்ந்துள்ளனர். ஒரு சிறுவன் உட்பட எட்டு அரக்கர்கள் அவளை சூறையாடியுள்ளனர். ரணத்தை தாங்க முடியாமல் ஆசிஃபா இறந்து போனாள்.

ஆசிஃபாவை சீரழித்ததில் முக்கியமான பங்கு இந்த சஞ்சிராமை சேரும். தனது மகன் மற்றும் பேரனை வரழைத்து ஆசிஃபாவை எட்டு நாட்களாக கோயில் கருவறைக்குள் அடைத்து வைத்து பாலியல் வன்புணர்வு செய்ததுடன், கொலையும் செய்துள்ளனர். அவளது தலையில் கல்லை போட்டுக் கொன்றுள்ளனர். இந்த கல்நெஞ்சக்கார கயவன் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இவன் செய்த இந்த குரூர குற்றத்திற்காக என்ன தண்டனையை கொடுக்கலாம் என்பதை இந்நாட்டின் குடிமக்களாகிய நீங்களே முடிவெடுக்க வேண்டும்.

ஆசிஃபாவுக்கு நடந்தது என்ன? உயிரை உறைய வைக்கும் சம்பவம்….!

SHARE