பொண்ணுங்களுக்கு காதில் மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா?

0
15

மச்சம் பிறப்பின்போதோ அல்லது அதன் பிறகோ உருவாகும். ஆனால் என்றும் மறையாதது. மச்சம் செல்குவியலினால் உருவானது
என்றாலும் நமது அர்த்த சாஸ்திரத்தில் மச்சம் உருவாகும் ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு அர்த்தங்களும், அதற்காக பலன்களும் உருவாக்கியுள்ளனர்.

மச்சங்கள் உருவாகும் இடத்தைப் பொறுத்து பலன்களும் மாறுபடுகின்றன. ஆண்களுக்கு தனிப் பலனும், பெண்களுக்கு தனிபலனும்
தரப்படுகின்றன.அவ்வாறு பெண்களுக்கு எந்த இடத்தில் எந்த மச்சம் உருவானால் அதற்கான பலன்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம்.

நெற்றி :

நெற்றியில் மச்சமிருந்தால் அவர்கள் நிறைய தன்னம்பிக்கையுடன் வாழ்வார்கள். தங்களுடைய சுயதிறமையாலும், முயற்சியாலும் முன்னேற்றம் காண்பார்கள்.

நெற்றிக் கோடுகள் :

நெற்றியில் அமைந்திருக்கும் கோடுகளின் மேல் மச்சம் இருந்தால் அவர்களுக்கு வெளி நாடு போகும் வாய்ப்புகள் இருக்கும்.

புருவங்களுக்கு மத்தியில் :

இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் அவர்கள் அதிர்ஷடசாலிகள். நல்ல செல்வாக்கும் பெற்றிருப்பார்கள். கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை அமையும்.

கண் கருவிழிகள் அருகில் :

வலது அல்லது இடது கருவிழிகளுக்கு அருகில் இருந்தால் அமைதியானவர்கள், அறிவானவர்களாக இருப்பார்கள். நல்ல வசதியான
ஆணையே மணம் செய்து கொள்வார்கள்.

காது :

பெண்களுக்கு காதில் மச்சம் இருந்தால் சிறந்த பலன்களைத் தரும். அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். புத்திசாலிகளாகவும், தெளிவான முடிவை எடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.

மூக்கின் அருகில் :

மூகின் அருகில் மச்சம் இருந்தால், இவர்களுக்கு பணத்தட்டுப்பாடே இருக்காது. செல்வம் மிக்கவர்களாகவும், வேண்டியதை பெறுபவர்களாகவும் அமையும்.

 

கன்னத்தில் :

கன்னத்தில் மச்சமிருந்தால் நிறைய நண்பர்கள் அவர்களுக்கு இருப்பார்கள். பொதுவெளியில் செல்வாக்கு மிக்க நண்பர்களை கூடவே வைத்திருப்பார்கள். வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பார்கள்.

உதட்டில் மச்சம் :

உதட்டில் மச்சமிருந்தால் வசீகரமாக இருப்பார்கள். மேலுதட்டில் மச்சம் இருந்தால் நிறைய ஆண் நண்பர்கள் இருக்கும். வாழ்க்கையை
நேர்மையாக அணுகுவார்கள். கீழுதட்டில் மச்சமிருந்தால் கடின உழைப்பாளியாகவும், நன்றாக படிக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

கழுத்து :

கழுத்தில் மச்சமிருப்பவர்கள் பொறுமையாக இருப்பவர்கள். கடின உழைப்பாளிகள். அவர்களுடைய வாழ்க்கைத் துணையை கவனமாக
தேர்ந்தெடுப்பார்கள். அவர்களை விடவும் பணிவாகவும், அமைதியாக இருப்பவரையே துணையாக அடைய நினைப்பார்கள்.

தோள்பட்டை :

தோள்பட்டையில் மச்சமிருந்தால் நல்ல ராஜபோக வாழ்க்கையை வாழ்வார்கள். மிகவும் பணிவானவர்கள். நல்ல அழகான , தங்களை
விட திறமையான, வசதியான வாழ்க்கைத் துணை வருவதையே விரும்புவார்கள்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்