மரணத்திற்கு பின் என்ன நடக்கும்? மரண விளிம்பிற்கு சென்றவர்களின் அனுபவங்கள்!!

0
21

எல்லா ஆட்டங்களையும் போடுகிறான் மனிதன். எதனைக் கண்டும் பயமில்லை.
எவரையும் தனது சுய நலத்திற்காக அழிக்கிறான். இருக்கும் வரை
என்னவேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற நினைப்பு மட்டும்தான் அவனுக்கு
இருக்கின்றது.

அப்படி மிக மோசமான உயிரனமான மனிதன் பயப்படுவது மரணத்திற்கு மட்டுமே.
விஞ்ஞானத்தில் எதையும் சாதிக்க முடியும் என்று கர்வத்துடன் சொல்லும்
அறிவியாளர்களிடம் மரணத்திற்குப் பின் என்ன? என்று கேட்டுப்பாருங்கள். சிரித்துக்
கொண்டு சென்று விடுவார்கள்.

மரணத்திற்குப் பின் நாம் என்னாவோம் என்பதை நிறைய பேர் பலவிதங்களில்
சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது யூகங்களாகத்தான் இருந்ததே தவிர, எதுவும்
அனுபவமில்லை. மரணத்தை அனுபவிக்க முடியாது. அது வேறு உலகம். இந்த வாழ்க்கை கடந்த காலம் ஆகிவிடும். நேற்றைய நாளுக்கு எப்படி உங்களால் மீண்டும் செல்ல முடியாதோ அவ்வாறு இறப்பிற்கு பின் மீண்டும் வாழ்ந்த காலத்திற்கு மீண்டும் வர முடியாது.

ஆனால்,…. மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிருடன் மீண்டும் வந்திருப்பவர்களால் ஓரளவு அனுமானிக்க முடிகிறது. அப்படி மீண்டு வந்தவர்களை கண்டிருக்கிறீர்களா? நான் பார்த்திருக்கிறேன். அவர்களிடம் அதனைப் பற்றிய அனுபவங்கள் கேட்டிருக்கிறேன். அதோடு பல புத்தகங்களில் மரணத்தை தொட்டு வந்தவர்கள் கூறிய அனுபவமும், நான்
சந்தித்திவர்களின் அனுபவங்களும் ஒத்து போவது ஆச்சரியம். அவ்வாறு
அனுபவப்பட்டவர்களின் கருத்துக்களை நீங்களும் கொஞ்சம் கேளுங்கள்.

வித்தியாசமான அனுபவம் :

எனக்கு தெரிந்த பெண் குழந்தை பத்து வயதிருக்கும். மிக மோசமான விபத்தில்
அடிப்பட்டு கோமா நிலையிலிருந்தாள். அவளின் எந்த உறுப்புகளும் செயல்படவில்லை. மருத்துவர்கள் முடியாது என்று கைவிரித்தனர். அவரின் அம்மா கண்ணீர் விட்டு அழுது, பிதற்றினார். ஐந்தாவது நாள் திடீரன அவளுடைய கல்லீரல் செயல்படத் தொடங்கியது.

மூளையில் கசிந்து கொண்டிருந்த ரத்தம் நின்றது. பிழைத்துக் கொண்டாள். ஒட்டு மொத்த மருத்துவமனையும் ஆச்சரியத்தால் உறைந்து, இது அதிசயம் என்று கூறினர்.
பெங்களூரில் செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் அவள் பெயர் மற்றும் அவளது
விபத்து விபரங்கள் பதிந்த மெடிக்கல் மிராக்கள் என்று கல்லேடு ஒன்றை
பத்திருக்கிறார்கள். இன்றும் அதனை காணலாம்.

அந்த குழந்தை சில மாதங்களுக்குப் பின் என்ன கூறினாலென்றால்… கோமா நிலையில் இருந்தபோது அவளுக்கு மிதந்த மாதிரி இருந்ததென கூறினாள். அப்போது தனது உடலை தானே பார்த்தாகவும் கூறினாள். அதன் பின் ஏதோ வெளிச்சம் ஒன்றை க்ண்டதாக சொன்னாள்.

அது போல் ஆராய்ச்சியாளர் ரேமண்ட் மூடி தன் ஆராய்ச்சி முடிவில் மரண விளிம்பு
அனுபவங்களில் பொதுவாக எல்லோராலும் சொல்லப்பட்ட விஷயங்களயும் கூறியுள்ளார்.

ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலி :

ஐம்புலன்களும் அடங்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் மரணம் நெருங்குகிறது உணரும்
அந்த நேரத்தில் பலரும் ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலியைக் கேட்டிருக்கிறார்கள். அது இனிமையாக இல்லாத ஒருவித அசாதாரண ஒலியாக இருந்தது என்று அவர்கள்
குறிப்பிடுகிறார்கள். இது இன்னமும் நமக்கு ஒரு புதிராகவே இருக்கிறது.

உடலை விட்டு வெளியேறிய அனுபவம் :

கிட்டத்தட்ட அனைவருமே தங்கள் உடலைப் பிரிந்து அந்தரத்தில் மிதப்பது போல
உணர்ந்ததாகத் தெரிவித்தார்கள். மருத்துவர்கள் சூழ நின்ற தங்கள் உடலை அவர்கள்
தெளிவாகப் பார்க்க முடிந்ததாகத் தெரிவித்தார்கள்.

சுரங்கப்பாதை :

பலரும் கும்மிருட்டிற்கு ஒரு சுரங்கவழிப் பாதை வழியாக மின்னல் வேகத்தில்
இழுக்கப்பட்டதாகவும் அந்த சுரங்க வழிப் பாதையின் முடிவில் பளிச்சிடும் பொன்னிற
அல்லது வெள்ளை நிற ஒளிக்குச் சென்றதாகக் குறிப்பிட்டார்கள். இது ப்ளேடோவின்
சிப்பாய் கண்ட அனுபவமாகவும் இருக்கிறது.

முன்பே இறந்தவர்கள் :

ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் மனிதர்களைக் கண்டதாகச் சொல்கிறர்கள். சில
சமயங்களில் முன்பே இறந்து போயிருந்த ஒருசில நண்பர்களோ, நெருங்கிய
உறவினர்களோ அங்கிருப்பதைப் பார்த்ததாகச் சிலர் சொன்னார்கள்.

ஒளி :

எல்லாரும் ஏதோ ஒரு ஒளியை கண்டிருக்கிறார்கள். அந்தந்த மதத்தை சார்ந்தவர்கள்
தங்களுடைய கடவுள் என்று கூறுகின்றனர். ஆனால் ஒட்டுமொத்தமாக அவர்கள்
எல்லாரும் ஒத்துக் கொண்டது ஒரு பெரிய ஜோதியை. ஏதோ ஒர் ஒளி நம்மை
இயக்குகிறது என்பது மட்டும் நமக்கு புலப்படுகின்றது.

மேலே சொன்னவை எல்லாம் பெரும்பாலோனோர் சொன்ன அனுபவத்தின்
அடிப்படையில்தான். இப்படியான அனுபவங்களும் இல்லாதவர்களும் உண்டு. எது
எப்படியோ வாழும் வரை நிம்மதியாக யாருக்கும் தீங்கில்லாமல் வாழ்ந்தாலே
போதுமானது இல்லையா?

SHARE