டிச-2 வரை அப்போலோவில் நடந்தவை: டாக்டர் பாலாஜியின் வாக்குமூலம்!

0
1215

கடந்த 2௦16ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவிற்கு, அப்போலோவில் டிசம்பர் 2ம் தேதி வரை நடந்தவற்றை விசாரணை ஆணையத்தின் முன்பு டாக்டர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு சார்பில், நீதிபதி ஆறுமுகசாமியின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதில் சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயணபாபு, மருத்துவக் கல்விக்குழுவின் முன்னாள் இயக்குநர் விமலா, அரசு மருத்துவர்கள் முத்துச்செல்வன், கலா, டிட்டோ, பாலாஜி ஆகியோர் சாட்சியம் அளித்துள்ளனர்.

டிச-2 வரை அப்போலோவில் நடந்தவை: டாக்டர் பாலாஜியின் வாக்குமூலம்!

டாக்டர்கள் வாக்குமூலம்:

ஜெயலலிதாவின் சிகிச்சைக்காக ஆஜரான டாக்டர்களுக்கு, மருத்துவமனையிலேயே தனி அறை ஒதுக்கப்பட்டது. அந்த அறையில்தான் அனைத்து டாக்டர்களும் அமர்ந்திருந்தனர். ஒரு தொலைக்காட்சியோ, செய்தித்தாள்களோ கூட அந்த அறையில் இல்லை. ஒரு நாள் ஜெயல்லைதாவிற்கு சிடி ஸ்கேன் எடுப்பதற்காக அவரது அறையில் இருந்து அழைத்து வந்தார்கள். அப்போதும் கூட ஸ்டெக்சரை சுற்றி ஸ்க்ரீன் போட்டு மூடியே கொண்டு சென்றனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டிச-2 வரை அப்போலோவில் நடந்தவை: டாக்டர் பாலாஜியின் வாக்குமூலம்!

டாக்டர் பாலாஜி சாட்சியம்:

தானும், சசிகலாவும் மட்டுமே தினசரி ஜெயலலிதாவை பார்த்ததாக கூறியிருக்கிறார் டாக்டர் பாலாஜி. எப்போது எழுந்தாலும் ஜெயலலிதா சசிகலாவை மட்டும்தான் அழைப்பார். ஜெயலலிதாவின் கைரேகை வாங்கும்போது அவர் சுயநினைவுடன் இருந்தார் என்றும், அப்போது சசிகலா உடன் இருந்தாகவும் தெரிவித்துள்ளார். தமிழக அரசு மருத்துவக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் என்பதால் முதலமைச்சருக்கு சிகிச்சை அளித்திட லண்டன் டாக்டரையும், எய்ம்ஸ் டாக்டர்களையும் அழைத்ததாகவும் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவிடமிருந்து நாம் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டிய 7 விடயங்கள்!

நோ சொன்ன ஜெயலலிதா:

லண்டனில் இருந்து வந்திருந்த டாக்டர் ரிச்சர்ட் பீலே, ஜெயலலிதாவிடம் பேசுகையில், அவரை லண்டன் வருமாறும், அங்கே நல்ல முறையில் சிகிச்சை அளித்து அனுப்பி வைப்பதாகவும் கூறினார். ஆனால் ஜெயலலிதா லண்டன் வர மறுத்துவிட்டதாக பாலாஜி சாட்சியம் அளித்துள்ளார்.

டிச-2 வரை அப்போலோவில் நடந்தவை: டாக்டர் பாலாஜியின் வாக்குமூலம்!

டிசம்பர் 2 வரை:

டிசம்பர் 2ம் தேதி வரை ஜெயலலிதாவுக்கு அப்போலோவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதுவரை மட்டும்தான் எனக்கு தெரியும் என்று ஆறுமுகசாமியின் விசாரணை கமிஷனில் டாக்டர் பாலாஜி சாட்சியம் அளித்துள்ளார். பாலாஜி மீண்டும் 27ம் தேதியன்று ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

SHARE