ஏன் ஆண்கள் கொழுப்பு அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள்!!

0
11

கொழுப்பு என்றாலே தூரம் ஓட வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்ட விதி இன்று . ஜீரோ கொழுப்பு என டயட்டை அறிமுகப்படுத்தி அதனை பயன்படுத்தி அதன் பின் தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர். எதை மருத்துவர்கள் குறிப்பிட்டனரோ, அதை மறந்துவிட்டு, ஒட்டுமொத்தமாக கொழுப்பை தடை செய்து விட்டோம்.. இதற்கு அரைகுறை புரிதலே காரணம்.

கொழுப்பு மிக மிக முக்கியமான சத்து. உங்கள் உடலில் விட்டமின் டி சத்து கிடைப்பதற்கு, முக்கியமான ஹார்மோன் சுரப்பதற்கு எல்லாம் மூலக் காரணம் கொழுப்புதான். இவ்வளவு ஏன், உங்கள் உடலுக்கு ஆதாரமான செல்களும் உருவாகவும் கொழுப்பு மிக மிக அவசியம்.

முதலில் முக்கியமான விஷயம் தெரிந்து கொள்ளுங்கள். கொழுப்பில் நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு என்று உள்ளது. நல்ல கொழுப்பு உள்ள உணவுகள் உங்கள் இதயத்திற்கு , உடல் எடை குறைவதற்கு மிக முக்கியமானது.கெட்ட கொழுப்புதான் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். மோசமானது.

நல்ல கொழுப்புள்ள உணவுகள் :

மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் கொண்ட உணவுகள் எல்லாமே நல்லவைகள்தான். தாவர எண்ணெய், தேங்காய் எண்ணெய், நட்ஸ் வகைகள், வேர்க்கடலை. நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவைகள் நல்ல கொழுப்புகள் கொண்டவை.

கெட்ட கொழுப்புள்ள உணவுகள் :

பொறித்த எண்ணெய், ட்ரான்ஸ் கொழுப்பு கொண்ட உணவுகள், பன்றிக் கறி, ஐஸ் க்ரீம், மாட்டுக் கறி போன்றவற்றில் சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள்.

எனவே கொழுப்பு உள்ள உணவு என்று எல்லாவற்றையும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் ஒதுக்குவதை விட்டுவிட்டு, தரம் பிரித்து
உண்ணுங்கள்.

எது நல்ல கொழுப்பு என தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? தொடர்ந்து
படியுங்கள்.

எலும்புகள் :

நல்ல கொழுப்புள்ள உணவுகள் சாப்பிட்டால் விட்டமின் டி உற்பத்தி பெருகும். விட்டமின் டி அதிக கால்சியத்தை உருவாக்க உதவும். இவ்வாறு பலகீனமான எலும்பு பலமாகவும், திடமாகவும் மாறும்.

நோய்கள் குறையும் :

ஹார்மோன் சீராக சுரந்தால்பெரும்பாலான நோய்களை வராமல் காக்கலாம். அவ்வகையில் கொழுப்புகள் ஹார்மோன் சுரப்பதற்கு உதவுகின்றன. மேலும் இதயத்தில் கெட்ட கொழுப்புகள் படிய விடாமல் அரண் போல் காக்கின்றது. இதய வால்வுகளில் மற்றும் ரத்தத்தில் கொழுப்பு படிவதை தடுக்கின்றது.

மூட்டு வலி :

இன்றைய காலத்தில் 30 களின் மத்தியில் மூட்டு வலி வருவதற்கு மிக முக்கிய காரணம் உடலில் கொழுப்பு இல்லாமை. மூட்டைச்
சுற்றியுள்ள தசை நார்கள் இயங்க கொழுப்பு மிக முக்கியத் தேவை. கொழுப்பு குறையும் போது தசை நார்களிடையே வறட்சி ஏற்பட்டு உருவாகும் உராய்வினால் எலும்பு தேய்மானம் உண்டாகும் .

டெஸ்டோஸ்டீரான் :

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தை பேறின்மை அதிகமாகவதற்கு காரணம் உணவுப் பழக்கங்கள்தான் என்று ஆய்வுகள் கூறுகின்றன. டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் சீராக சுரந்தால் விந்தனுக்கள் உற்பத்தியாவதில் தடை இருக்காது. நல்ல கொழுப்புகள் அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிடும்போது , டெஸ்டோஸ்டீரான் உற்பத்தியும் அதிகமாகின்றது என ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்