வாவ்… வேலூரில் மாவட்டத்தில் பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கா?

0
5112

வேலூர் மாவட்டத்தை காட்டினால், எல்லோருக்கும் அதன் பிரமாண்டமான கோட்டைதான் நினைவுக்கு வரும். அதை தவிர இந்த மாவட்டத்தில் பல சுற்றுலா ஸ்பாட்கள் உள்ளன. அவற்றை இங்கே புகைப்படங்களுடன் தொகுத்து வழங்கியுள்ளோம். சென்னை, சேலம், பெங்களூருவில் இருந்து வார இறுதி நாட்களில் வேலூரின் இந்த பகுதிகளுக்குச் சென்று வரலாம்.

வாவ்... வேலூரில் மாவட்டத்தில் பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கா?வேலூர் கோட்டை:
இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் வெடித்த முக்கிய இடம்தான் இந்த கோட்டை. ஆங்கிலேயர்களின் பொறியியல் நுட்பங்களுடன், செங்கோண கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கம்பீரமான கொட்டை இது. இக்கோட்டையை சுற்றியுள்ள அகழியில் படகு குழாம் அமைந்துள்ளது. மேலும் இக்கோட்டைக்குள் விஜயநகர பேரரசுகள் கட்டிய ஜலகண்டேஸ்வரர் கோவிலும் அமைந்துள்ளது.

 

அமிர்தி உயிரியல் பூங்கா:
ஜவ்வாது மலைத்தொடரின் அடிவாரப் பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட ஏக்கரில் பரந்து விரிந்திருக்கும் இந்த பூங்காவில் பல்வேறு வகைப்பட்ட பறவை இனங்களும், விலங்கினங்களும் வாழ்கின்றன. உள்ளே ஒரு அழகான அருவியும் உள்ளது. பல்வேறு மூலிகை செடிகளும், அரிய வகை தாவரங்களும் வளர்கின்றன.

 

ஆற்காடு:
பதினெட்டாம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட கர்நாடக நவாப்களின் தலைநகரம் இந்த ஆற்காடு. பாலாற்றின் கரையில் ஆற்காடு நவாப் தாவூத்தானால் கட்டப்பட்ட கோட்டை, திப்பு சுல்தானின் படையெடுப்பில் சிதைக்கப்பட்டாலும், பின்னாளில் ஆங்கிலேய தளபதி ராபர்ட் க்ளைவால் கைப்பற்றப்பட்டாலும் இன்றும் அக்கோட்டை பாதுகாக்கப்படுகிறது.

 

ஏலகிரி மலை:
ஜவ்வாது மலையை தழுவி அமைந்திருக்கும் ஏலகிரி ஒரு இயற்கை சுரங்கம். இம்மலையை சுற்றியுள்ள கிராமங்களில் தொல்குடி மக்கள் வசித்து வருகின்றனர். வார இறுதி நாட்களில் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மலைகளையும், மலை சார்ந்த வாழ்வியலையும் கண்டு ரசிக்க ஏதுவான இடம் ஏலகிரி.