மெழுகுவர்த்தி கொண்டு எப்படி உங்க பாத வெடிப்பை போக்கலாம் தெரியுமா?

  0
  13

  வெடிப்பு பெண்களுக்கு தீராத பிரச்சனை. எப்படியும் வரத்தான் செய்கிறது என்று
  பெண்கள் கண்டுகொள்ளாமல் பாதம் முழுதும் மூடும்படி உடைகளை அல்லது செருப்பை அணிந்து செல்வார்கள். பெண்கள் என்றில்லாமல் ஆண்களும் இந்த பிரச்சனை உண்டாகிறது.

  அதிகக் கொழுப்புப் படிவங்கள் உடலின் பாரம் தாங்காமல் பாதத்தின் வழியாக
  வெடிப்பதால்தான் வெடிப்பு உண்டாகிற்து. பாதம் வறட்சியாக இருந்தல விரைவில்
  பிளந்துவிடும்.

  கட் ஷூ, ஷூ போன்றவற்றை நாள் முழுதும் போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு
  வெடிப்பு வராது. ஆனல வீட்டிலேயே அல்லது திறந்த காலணிகளிய அணிபவர்களுக்கு
  வெடிப்பு உண்டாகும்.

  அந்த வெடிப்பை நிரந்தரமகா வரக்கூடாதென்றால் ஒரே மருந்தால் எல்லாம் குணப்படுத்த முடியாது. தவறாத பராமரிப்பால் மட்டுமே குணப்படுத்தமுடியும்.அப்படி உங்களுக்கு உதவ சவுத் நியூஸ் சில குறிப்புகளை தந்திருக்கின்றது. படித்து பயன்படுத்திப் பாருங்கள். நல்ல பலன் தெரிந்தால் எங்களுக்கு கமெண்ட் இடவும்.

  மெழுகு :

  வெள்ளை மெழுகு வர்த்தியை உதிர்த்துக் கொள்ளுங்கள். விளக்கெண்ணெயை
  சூடுபடுத்தி அடுப்பிலிருந்து அகற்றி அதில் பொடித்த மெழுகுத் தூளை போடுங்கள்.
  முழுவதும் உருகிவிடும். லேசாக ஆறும்போது மீண்டும் க்ரீம் போல் மாறிவிடும்.
  இதனை தினமும் இரவில் தடவி வந்தால், வெடிப்பு மறைந்து 4 நாட்களில் உங்கள் பாதம் மென்மையாகும்.

  பப்பாளி பழம் :

  பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க
  வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க
  வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்த வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

  மருதாணி :

  மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து
  உலர விடவேண்டும். பின் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு
  குணமாகும்.

  வேப்பிலை:

  வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைக்க
  வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில்
  பூசினால் வெடிப்பு நீங்கும்.

  விளக்கெண்ணெய் மற்றும் மஞ்சள் :

  விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் சமஅளவில் எடுத்து கொண்டு அதில் சிறிது
  மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல குழைத்து பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில்
  தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகி விடும்.

  SHARE

  உங்க கருத்தை தெரிவிக்கலாம்