ரம்யா முதல் டிடி வரை…. விஜய் டிவி தொகுப்பாளர்களின் கல்யாண பரிதாபங்கள்!

0
10333

விஜய் டிவி தனது தொகுப்பாளர்களுக்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்க்கும் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம்தான் என்றாலும் இந்த டிவிக்கும், திருமணத்திற்கும் எழாம் பொருத்தம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த டிவி ஊரறிய உலகமறிய செய்து வைத்த எந்த பிரபலங்களின் கல்யாணமும் மகிழ்ச்சியானதாக நீடிக்க வில்லை. விஜய் டிவி கொண்டாடிய பிரபலங்களின் திருமணங்கள் இறுதியில் விவாகரத்தில் வந்து முடிந்திருக்கிறது.

ரம்யா முதல் டிடி வரை.... விஜய் டிவி தொகுப்பாளர்களின் கல்யாண பரிதாபங்கள்!1. ரம்யா – தொகுப்பாளினி
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான ரம்யா அபராஜித் ஜெயராமன் என்பவரை 2014ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி திருமணம் செய்தார். இவர்களது திருமண சடங்குகளை டிவியில் நிகழ்ச்சியாக ஒளிபரப்பி பூரிப்பு அடைந்தது விஜய் டிவி. ஆனால் பாவம், ரம்யா திருமணம் ஆன 1௦வது நாளே கணவரை பிரிந்து விட்டார்.

ரம்யா முதல் டிடி வரை.... விஜய் டிவி தொகுப்பாளர்களின் கல்யாண பரிதாபங்கள்!2. மைனா – சீரியல் நடிகை:
‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் பேசப்பட்ட மைனா என்ற நந்தினியின் திருமணத்தையும் கொண்டாடியது விஜய் டிவி. ஆனால் மைனாவின் கணவர் கார்த்திகேயன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். நந்தினி விவாகரத்து கோரியதாலே கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

 

ரம்யா முதல் டிடி வரை.... விஜய் டிவி தொகுப்பாளர்களின் கல்யாண பரிதாபங்கள்!3. தாடி பாலாஜி – தொகுப்பாளர்:
தாடி பாலாஜியின் திருமணத்தில் இந்த டிவியின் தலையீடு இல்லை என்றாலும், பாலாஜியின் வாழ்க்கை தாளம் போட்டுக் கொண்டிருக்கிறது. ஸ்க்ரீனில் ‘கல கல’ கேரக்டராக தோன்றினார். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் குரூரமான எண்ணங்களை கொண்டவராக இருந்துள்ளார். அவர் தன் மனைவியையும், குழந்தையையும் கொடுமை படுத்தும் காணொளி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

ரம்யா முதல் டிடி வரை.... விஜய் டிவி தொகுப்பாளர்களின் கல்யாண பரிதாபங்கள்!4. டிடி நீலகண்டன் – தொகுப்பாளினி: 
டிடிக்கும் அவரது நீண்ட கால நண்பரான ஸ்ரீகாந்துக்கும் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. டிடி பணிபுரியும் தொலைக்காட்சியே அவரது திருமணத்தை இரண்டு நாட்களுக்கு கொண்டாடி, அதை ஒளிபரப்பியது. இப்போது டிடி விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

விஜய் டிவியின் முக்கிய பிரபலங்களின் சொந்த வாழ்க்கை இப்படியான இக்கட்டான முடிவுகளில்தான் முடிந்திருக்கிறது. டி.ஆர்.பி.யை ஏற்றிக்கொள்ள தனது ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை படம்பிடித்துக் காட்டுகிறது. ஆனால் அதே ஊழியருக்கு தனிப்பட்ட வாழ்வில் பிரச்சினை என்று வரும்போது ஏன் ஒதுங்கிக் கொள்கிறதே என பார்வையாளர்களிடம் கேள்விகள் எழுந்துள்ளன.

2ஜி வழக்கு கடந்து வந்த பாதை… 2007 முதல் 2017 வரை…!

SHARE