தமிழ் இலக்கணம் சொல்லித் தருகிறார் வைகைப்புயல் வடிவேலு

0
185

சமூக வலைதளங்களில் இயங்கும் மீம் கிரியேட்டர் சமூகம் முழுவதிற்குமே வடிவேலு படங்கள்தான் மெயின் கரு. மக்களிடம் ஜல்சா காட்டும் அரசியல்வாதிகளை ஓட ஓட விரட்டி தெறிக்கவிட்டார்கள் மீம் கிரியேட்டர்கள். மோடி வெளிநாட்டிற்கு போனாலும், செல்லூர் ராஜூ ஏரிக்கரைக்கு போனாலும் தாறுமாறாக கலாய்த்து ஓட்டுவதுதான் இவர்களுக்கு ஃபுல் டைம் ஜாப்.

அஜித் பட டைரக்டரையும், விஜய் டிவி ஷோவையும் கலாய்க்க பயன்பட்டுக்கிட்டு இருந்த இந்த மீம் இண்டஸ்ட்ரி, ஜல்லிக்கட்டு போராட்டத்துல இருந்து மக்கள் சேவை மையமா மாறியது. மீம் கிரியேட்டர்கள் திடீர்னு ஒரு நாள் தெய்வம் ஆனாங்க. மீமர்ஸ் போடும் போஸ்ட்களை பார்த்துதான் சாமானியனும் அப்டேட் பண்ணிக்க ஆரம்பித்தான் என இவர்களின் வரலாற்றை நீளமாக கதை எழுதலாம்.

உள்ளூர் சம்பவம் முதல் உலக நடப்புகள் வரை அவ்வப்போது முக்கியத்துவம் பெறுகிற செய்திகள்தான் மீம் வடிவம் பெறுகின்றன. கார்டூன் போன்ற கேலிச்சித்திரங்களின் நவீன வடிவம்தான் இந்த மீம்ஸ். சிரிக்க மட்டுமே அல்ல, சிந்திக்க வைக்கும் வல்லமையையும் கொண்டுள்ளவை இந்த மீம்ஸ். எனவே இது சமூகஊடகத்தில் ஒரு ஆயுதம் என போற்றப்படுகிறது.

மீம்ஸ் மூலம் இப்போது எதை வேண்டுமானாலும் கற்றுக்கொடுக்க முடியும் என்றாகிவிட்டது. வகுப்பறையில் நம்மை தூங்கவைத்த தமிழ் இலக்கணத்தையும் கூட, இப்போது சிரித்துக்கொண்டே உற்சாகமாக கற்றுத்தர முடியும் என்றால் அது மீம்ஸ் மூலமாக சாத்தியமாகியிருக்கிறது. மனோ என்னும் மீமியவாதி வடிவேலுவை தமிழாசிரியராக மாற்றி இருக்கிறார். வடிவேலு மீம்ஸ் மூலம், புரியாத இலக்கணப் பாடங்களை நமக்கு எளிதில் புரிய வைக்கிறார்.

அவர் போட்டுள்ள சில மீம்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்