நினைச்ச நேரத்துல மழையை வரவைக்கும் அதிசய சிறுவன் – விலகாத மர்மங்கள்!!

0
7591

உலகத்தில் சில விஷயங்கள் மர்மங்களாகவே இருக்கிறது. கிரகங்கள் எப்படி ஒன்றுடன் ஒன்று மோதாமல் ஒரே கோட்டில் சுற்றுகின்றன, பெர்முடாஸ் முக்கோணம், மாயமாகும் விமானங்கள், இறந்து பிழைக்கும் மனிதர்கள், இறந்த பின் ஆத்மா எங்கு போகிறது என பலவிஷயங்களுக்கு விடை தெரியாமல் மர்மங்களாகவே இருக்கின்றன. சில விஷயங்கள் ஆச்சரியமாகவும், திகிலாகவும் இருக்கும். அப்படியான ஆச்சரியம், திகில் கலந்த விசயங்கள் பார்க்கலாமா?

மழைப் பையன் :

நாமெல்லாம் மழை வராதா என வானம் பார்த்து கிடக்கிறோம்.ஆனா டோனி டெக்கர் என்ற சின்ன பையன் எங்க போனாலும் மழை கொட்டுமாம். 1983 ஆம் ஆண்டுல இந்த பையனை எல்லாரும் “ரெயின் பாய்”ன்னு தான் கூப்பிடுவாங்களாம். இவன் எந்த ஊருக்கு போனாலும் வரக் கூடாதுன்னு அந்த ஊர்க்காரங்க தடை பண்ணுவாங்க. காரணம் அவன் அங்கே போனதும், கண்களை மூடி ஒரு ட்ரான்ஸ் நிலைக்கு வருவான். உடனே அங்கே மழை வரும். இது எப்படினே யாருக்கும் தெரியவில்லை. அவன் நினைத்த நேரத்தில் மழையை வரவைக்கும் சீக்ரெட்டை யாரிடமும் அவன் சொல்லவேயில்லை.

சுவற்றில் அசையும் மனித முகம் !!

பெரிரியா ங்கற குடும்பம் தங்கள் வீட்டு சுவரில் மனித முகங்கள் தெரியறதா போய் கம்ப்ளெய்ன்ட் கொடுத்தாங்க. அதன்படி எல்லாரும் அவங்க வீட்டுக்குப் போய் பார்த்தா எல்லாருக்கும் அப்படி சுவற்றில் முகங்கள் தெரிஞ்சிருக்கு. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணோட முகம். திடீரென முகங்களின் பாவனைகள் மாறும். சில நிமிடங்களில் மறைஞ்சிடும். கொஞ்ச நேரத்துல திரும்பியும் வரும். இப்படி 20 வருடங்களாக மனித முகங்கள் தெரிஞ்சிருக்கு. இதனை புலனாய்வு செஞ்சவங்களாலும் இந்த பிரச்சனையை சரி பண்ண முடியலை.

ஏரிய காணோம் !!

பெட்டகோனியா ஏரி 5 மைல் தூரம் கொண்டது. 2007 ஆம் ஆண்டு, மார்ச் மாதம், புவியியல் நிபுணகள் ஆய்வு செய்த போது நன்றாகத்தான் இருந்திருக்கிறது. சரியாக ரெண்டு மாதங்கள் கழித்து பார்த்த புவியியல் நிபுணர்கள் பார்த்த போது அதிர்ந்திருக்கின்றனர். காரணம் அங்கிருந்த அவ்ளோ பெரிய ஏரியை காணோம். சன்னமா நீரோடை மட்டும் தென்பட்டிருக்கிறது. மீதி இடங்கள் எல்லாம் மணலும், ஐஸ் சதுப்புகளாகவும் இருந்திருக்கிறதாம். காரணம் என்னவென்று ஆராய்ந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. கிணத்தை காணோம் கதைதான்.

மாயமான கப்பல் :

கப்பலில் பயணித்த மொத்த பேரும் மாயமாகிவிட்டார்கள் என்றால் திகிலாகத்தானேயிருக்கும். கரோல்.ஏ. டீயரிங் என்ற கப்பல் 1921 ஆம் ஆண்டு கடலில் பயணித்தது. ஆனால் பயணம் செய்தவர்கள் யாரையும் கப்பலுக்குள் காணோம். அவர்களுடைய கைரேகைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த கடல் பெர்முடா முக்கோணத்தில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும் இதுவரை உண்மை தெரியவில்லை.

பேய் குழந்தை :

மெர்ஸி ப்ரவுன் என்ற சிறுமி இங்கிலாந்தில் 1892 ஆம் ஆண்டு காச நோயால் இறந்திருக்கிறார். அவர் இறந்தபின் அவளுடைய அம்மாவும், அவளது சகோதிரியும் அதே காரண த்தால் இறந்துவிட்டரகள். சில வருடங்கள் கழித்து அந்த குடும்பத்தில் சனதி செய்ய வேண்டும் என்பதற்காக இறந்த மெர்ஸி ப்ரவுன் சடலத்தை எடுத்த போது எல்லாருக்கும் அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. காரணம், அவளுடைய உடல் சிதையாமல் அப்படியே உயிருடன் இருப்பது போலிருந்திருக்கிறது. நகங்கள் வளர்ந்திருக்கிறது. ரத்தம் கூட உறையாமல் நீர்த்தன்மையுடன் இருந்திருக்கிறது. இதற்கு மருத்துவர்களும், விஞ்ஞானிகளுடம் விளக்கம் கொடுக்க முயற்சித்து தோல்வியடைந்துள்ளனர்.

SHARE