ஒரே படத்தில் ஆயிரம் சிகரெட் பிடித்த ரஜினிகாந்த்… எந்த படம்னு சொல்லுங்க பார்ப்போம்!

0
18142
        #ரஜினிகாந்த் பிறந்தநாள் சிறப்புப் பதிவு [12 - டிசம்பர்]

மிழ் திரையுலகத்தில் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கொண்டுவந்தது மட்டுமின்றி, தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் படையை உருவாக்கி வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். எண்பதுகளில் இவர் தொட்ட படங்கள் எல்லாம் வெற்றி. தியேட்டரில் கூட்டம் முந்தியடித்துக் கொண்டிருக்கும். வில்லனாக அறிமுகமாகினாலும் தனது ஸ்டைலால் மிகப்பெரிய ஹீரோவாக வளர்ந்திருக்கிறார். அவர் நடித்திருக்கும் படங்களின் Off-screenல் நடந்துள்ள சில சுவாரசிய நிகழ்வுகளை இங்கே தொகுப்பாக வழங்கியுள்ளோம்.

ஒரே படத்தில் ஆயிரம் சிகரெட் பிடித்த ரஜினிகாந்த்... எந்த படம்னு சொல்லுங்க பார்ப்போம்!

#1 ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் அறிமுகமான ரஜினி பேசிய முதல் வசனம் ‘பைரவி வீடு இதுதானே’ என்பதுதான். நடித்த காட்சிகள் 6.

ஒரே படத்தில் ஆயிரம் சிகரெட் பிடித்த ரஜினிகாந்த்... எந்த படம்னு சொல்லுங்க பார்ப்போம்!

#2 ரஜினி சிகரெட் ஸ்டைல் அறிமுகமான படம் ‘மூன்று முடிச்சு’. இந்த பட படப்பிடிப்பு காலத்தில் அவர் பிடித்த சிகரெட்டுகளின் எண்ணிக்கை (ஆன் ஸ்கிரின், ஆஃப் ஸ்கிரின் சேர்த்து) ஆயிரத்தை தாண்டியது.

ஒரே படத்தில் ஆயிரம் சிகரெட் பிடித்த ரஜினிகாந்த்... எந்த படம்னு சொல்லுங்க பார்ப்போம்!

#3 ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த சிவகுமார் வில்லனாகவும், வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினி ஹீரோவாகவும் நடித்த படம் ‘புவனா ஒரு கேள்விக்குறி’.

'16 வயதினிலே' பரட்டை முதல் 'கபாலி' வரை... ரஜினிகாந்த்தின் சிறந்த பஞ்ச் வசனங்கள்!!

#4 ’16 வயதினிலே’ படத்தில்தான் ரஜினி ”இதெப்படி இருக்கு’ என முதன் முறையாக பஞ்ச் டயலாக் பேசினார். பின்பு அந்த டயலாக்கை பல படத்தில் பேசினார். அந்த டயலாக்கையே தலைப்பாக கொண்டு ஒரு படமும் வெளியானது.

ஒரே படத்தில் ஆயிரம் சிகரெட் பிடித்த ரஜினிகாந்த்... எந்த படம்னு சொல்லுங்க பார்ப்போம்!

#5 ரஜினி பல படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் கொடூர வில்லனாக நடித்த படம் ‘ஆடுபுலி ஆட்டம்’. ஒவ்வொரு வில்லத்தனத்தையும் செய்து விட்டு இது ரஜினி ஸ்டைல் என்று வசனம் பேசுவார்.