சங்கரின் பேரில் அறக்கட்டளை தொடங்கும் கௌசல்யா!!

0
458

தமிழகத்தையே உலுக்கிய உடுமலைபேட்டையில் பட்ட பகலில் பலரது கண் முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட சங்கர் கௌசல்யா வெட்டப்பட்னர். இதில் சம்பவ இடத்திலே சங்கர் பலியானர். கௌசல்யா படுகாயங்களுடன் மீட்கப்ட்டார்.

தமிழகத்தையே உலக்கிய இச்சம்பவம் குற்றவாளிகளுக்கும் உச்சபட்ச தண்டனையன தூக்கு தண்டனையை வழங்கியது திருப்பூர் நீதிமன்றம். அந்த சம்பவத்திற்கு பிறகு சாதி ஒழிப்பு போராளியாக செயல்பட்டுவரும் கௌசல்யா. உடுமலைபேட்டையில் பள்ளி குழந்தைகளுக்கு வீட்டிலேயே வகுப்பும் மற்றும் பாறை இசை பள்ளியும் நடத்தி வருகிறார்.

சங்கர் இறந்து இரண்டாண்டு ஆன நிலையில் அவரது நினைவுநாளில் பெயரில் அறக்கட்டளை துவங்குகிறார்.

இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் ஆர்.நல்லக்கண்ணு, மனித உரிமை செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மே17 இயக்கத் தலைவர் திருமுருகன்காந்தி, பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்திலிருந்து வளர்மதி, இயக்குனர் பா.ரஞ்சித், கோபிநயினர், சமுத்திரகனி, கக்குஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்ய பாரதி உள்ளிட்ட பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்