“தெய்வமகள்” சத்யாவிடம் தவறாக நடந்து கொண்ட தோழியின் தந்தை..!

0
2218

சன் டிவியில் “தெய்வமகள்” என்ற சீரியலில் சத்யாவாக நடித்த வாணி போஜன் குடும்ப பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலம். நேர்மையான தாசில்தாராக நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.

சமீபத்தில் பல துறைகளில் இருக்கும் பெணகள் கருத்து பரிமாற்றம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் தனும் பாலியல் தொல்லையால் ஆளானேன் என்று கூறினார்.

"தெய்வமகள்" சத்யாவிடம் தவறாக நடந்து கொண்ட தோழியின் தந்தை..!

அவர் 4 வது படித்துக் கொண்டியிருக்கும் போது தனது தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் தோழியின் தந்தை மட்டுமே இருந்துள்ளார். அவர் உன் தோழி மேல் அறையில் தான் இருக்கிறாள் என்றார்.

வாணி போஜனும் மேலே உள்ள அறைக்கு சென்றதும், பின்னாலே வந்து அறையின் கதவை பூட்டி விட்டு வாணி போஜனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் தனது தோழியின் வீட்டிற்கு செல்வதை நிறுத்துக் கொண்டார். நடந்த கொடுமையை பற்றி தோழியிடம் கூட தெரிவிக்கவில்லை என்று அதில் தெரிவித்திருந்தார் வாணி போஜன்.