மருந்து சாதம் எப்படி பண்ணனும் தெரியுமா? அதை சாப்பிட்டா என்ன நன்மை உண்டாகும்?

0
13

நம்முடைய உணவு வகைகள் பெரும்பாலும் மருத்துவ ரீதியாக செய்யப்படுபவைதான்.
உடல் அசதிக்கு, அஜீரணத்திற்கு, வயிற்று வலிக்கு, காய்ச்சலுக்கு என உணவின்
மூலமாகவே உடல் கோளாறுகளை குண்ப்படுத்தலாம். அல்சருக்கு உணவுதான் மருந்து
என்பது உங்களுக்கு தெரியாமலில்லை.

இப்படி அந்த காலத்தில் இரும்பு மற்றும் மண் பாத்திரங்களில்தான் சமைத்ததால் உணவு மற்றும் பாத்திரத்தின் சத்தும் சேர்த்து இருமடங்கு நமக்கு கிடைத்தது. அப்படி பலவகை சத்துமிகுந்த மருத்துவ உணவுகளை நாம் மறந்தே போய் விட்டோம். அப்படியான மருந்து உணவுதான் இது.

தேவையானவை:

சுக்கு – ஒரு துண்டு,
வெள்ளை மிளகு – 2 டீஸ்பூன்,
திப்பிலி – கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி.
வெங்காயம் – 2,
பூண்டு – 5 பல்,
உப்பு – தேவையான அளவு,
மசாலாத் தூள் -அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்.

செய்முறை:

ஸ்டெப்-1

சுக்கு, மிளகு திப்பிலி மற்றும் கருவேப்பிலையை வாணிலியில் வறுத்து பொடி செய்து
கொள்ளுங்கள்.

ஸ்டெப்-2 :

பின்னர் அதே வாணிலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை வதக்குங்கள்.
அத்துடன், ஏற்கெனவே அரைத்துவைத்திருக்கும் பொடியைச் சேர்க்க வேண்டும்.

ஸ்டெப்-3

பின் பூண்டு போட்டு சேர்த்து நன்றாக வதங்கியதும், உப்பு, மஞ்சள் தூள், கறி மசாலா சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கி இறக்குங்கள்.கமகமவென மருந்து துவையல் ரெடி. இதில் சூடான சாதத்தை கலந்து சாப்பிடுங்கள்

மருத்துவப் பயன்:

அஜீரணக் கோளாறு உள்ளவர்கள், வாரம் ஒருமுறை இதுபோல் சமைத்துச் சாப்பிட்டால், அஜீரணப் பிரச்னையே இருக்காது. உடல் அசதி தீரும். உடல் கழிவுகள் சீராக வெளியேறி உறுப்புகள் இளமையாக வைத்திருக்க உதவும்.

SHARE