ஆண்களே, தக்காளி சாப்பிட்டா படுக்கையில் பெஸ்ட் பெர்பார்மன்ஸ் கொடுக்கலாம்!

0
906

நம் நாட்டு ஆண்களுக்கு உயிரணுக்களின் அளவை அதிகரித்துக் கொள்வதில் சற்று அதிகமாவே கவனம் இருக்கிறது என்பது நல்ல விஷயம்தான். இணையதளங்களில் தேடி, பல விதமான காய்கறிகளையும், உணவுகளையும் வாங்கி சாப்பிட்டு தங்களது உயிரணு வளத்தை காப்பாற்றிக் கொள்கின்றனர். ஆண் துகள் வளமுடையதாக இருந்தாலும் பெண் கருவுறும் காலம் தாமதப்படும் அல்லது சிலருக்கு பல முறை முயற்சிகள் தேவைப்படும். இதற்கு ஆண் துகளின் வேகமும், செயற்பாட்டு திறனும் சற்று மந்தமாக இருப்பதே காரணம் ஆகும். சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில் ஆண் துகளுடைய வேகம் 50% வரை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே அதன் வளத்தையும், வேகத்தையும், செயற்பாட்டு திறனையும் அதிகரிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்காக 3 வழிமுறைகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

 தக்காளி:

பொதுவாக எல்லா உயிர்த்துகள்களின் தலைப்பிரட்டை அமைப்பும் ஒரே மாதிரியாக இருக்காது. எனவே எல்லா துகள்களாலும் சீரான வேகத்தில் பயணிக்க முடியாது. குறிப்பிடத் தகுந்த துகள் மட்டுமே சீரான வேகத்தில் பயணித்து கருப்பையை அடையும். அதன் முழு வேகத்தை தூரிதப்படுத்துவதற்கு தக்காளி வகை செய்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தக்காளியில் உயிரணுவின் நீந்தும் வேகத்தை அதிகரிக்கச் செய்யும் வேதிப்பொருட்கள் உள்ளது. எனவே தக்காளியை எந்த விதமாகவும் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். வாழைப்பழம் சூட்டை தணிக்கும் என்பதால் தினமும் உறங்கச்செல்லும் முன்பு சாப்பிடலாம். உயிரணுக்களின் தரத்தை மேம்படுத்தும் மாதுளைப்பழமும் எடுத்துக்கொள்ளுங்கள். இது என்ன பிரமாதம்? இத விட ஒரு ஸ்பெஷல் ஐட்டம் அடுத்த பக்கம்  இருக்கு. 

 

நோ மொபைல்:

உயிரணுக்களை சிதைப்பதில் மொபைல் போன்களும் அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளும் முக்கிய காரணமாக இருக்கின்றன. நாளொன்றுக்கு அதிக நேரம் மொபைல் பயன்படுத்தும் ஆண்களுடைய உயிரணுக்களின் திறன் குறைவாக இருப்பதாக அண்மையில் நடந்த ஆய்வுகள் கூறுகின்றன. கதிவீச்சுக்கள் உயிர்த்துகள்களின் வேகத்தை குறைக்கும். எனவே தேவைப்படாத நேரங்களில் மொபைல் போன்களிடம் இருந்து விலகியே இருங்கள்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்