நீங்கள் வாங்கும் முட்டையில் இப்படி வெள்ளையாக இருந்தால் அது என்ன தெரியுமா?

  0
  22

  முட்டை சைவமா? அசைவமா என இன்றைக்கு வரைக்கும் குழப்பம்தான்.முட்டை
  சைவம்தான் என முடிவுக்கு வந்து சைவத்திற்கு இழுத்துக் கொண்டனர் சைவப்
  பிரியர்கள். ஆனால் இந்த வீடியோ மற்றும் கட்டுரையை முழுக்கப் படித்த பின் இந்த
  முடிவை மாற்றிக் கொள்வீர்கள்.

  சாதரணமாக எப்போது ஒரு முட்டை கருவாக உருவாகும்?

  முட்டைக்கு தகுந்த தட்பவெப்ப நிலை மற்றும் வெளிப்புறத்திலிருந்து பாதுகாக்க
  முட்டையைச் சுற்றி பாதுகாப்பாக இருக்கும் ஓட்டினால் மட்டுமே ஒரு முட்டை
  கருவளர்ச்சி அடைந்து கோழியாக உருவாகும். சுருக்கமாக சொன்னால் கோழி
  அடைக்காத்தால் மட்டுமே முட்டை குஞ்சாக்கிறது.

  எனவே அடைக்காக்காத முட்டை கருவளர்ச்சி இல்லாமல் இருப்பதால் அது சைவம்
  என்று ,முந்தைய விளக்கங்களில் சொல்லிக் கொண்டிருந்தனர்.

  ஆனால் இப்போது அப்படி இல்லை. கோழி அடைக்காக்காமலேயே முட்டையின் ஓடு
  இல்லாமலேயே முட்டையைக் கொண்டு கோழியை உருவாக்க முடியும் என ஜப்பான்
  மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

  ஒரு கண்ணாடி கிளாஸில் ஒரு மெலிதான தெளிவாக தெரியும் பாலிதின் கவரினால்
  மூடி குழி விழச் செய்து, அந்த பாலிதின் கவருக்குள் முட்டையை உடைத்து
  ஊற்றினார்கள்.

  பின்னர் அந்த கவரில் ஆங்காங்கே துளைகள் இட்டு நன்றாக தெரியக் கூடிய கண்ணாடி
  மூடியினால் இறுக மூடி, அதனை இன்குபேட்டரில் வைத்து கவனித்தரகள்.

  தெளிவாக தெரியும் கலம் என்பதால் அதனை அவ்வப்ப்போது கவனித்து வந்தார்கள்.

  இந்த முட்டை குஞ்சாக மாறுகிறதா இல்லையா என்பது தெரிவதற்கு முன் அதனைப்
  பற்றி சுவாரஸ்யமான தகவல்.

  (பொதுவாக முட்டையின் எந்தப் பகுதி கருவாக மாறுவதாக நினைக்கிறீர்கள். மஞ்சள் கரு? இல்லை. மஞ்சள் கருவுக்குள் ஒரு வெள்ளைப் புள்ளி இருக்கும். அது
  ப்ளாஸ்டோடெர்ம் எனப்படும் சிறு செல். இந்த செல்தான் கரு வளர்வதறாக ஆதாரமான செல்.)

  3 வது நாள் :

  அந்த வெள்ளை புள்ளியாக இருந்த ப்ளாஸ்டோடெர்ம் இதயமாக மாறித் துடித்துக்
  கொண்டிருந்தது.

  5 வது நாள் :

  அந்த பளாஸ்டோடெர்ம் நன்கு வளர்ச்சியடைந்து ஒவ்வொரு உறுப்பாக வளர
  தொடங்கியிருந்தது.

  21 ஆவது நாள் :

  21 ஆவது நாள் ஒரு கோழியின் எல்லா உறுப்புகளும் வளர்ந்த நிலையில் இருந்தது.

  அதன் பின் முழுக் கோழிக்குஞ்சாக வளர்ந்து உருப்பெற்றது.

  இந்த ஆய்வு ஜப்பான் நாட்டின் எல்லா மீடியாக்களில் வந்தபோது பரபரப்ப்பு ஏற்பட்டது.இதன் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் வைக்கப்பட்டன.

  முட்டை ஓடில்லாமல் கரு வளர்வது ஏற்கனவே ஆய்வு ஒரு ஆராய்ச்சி இதழில்
  வந்திருக்கின்றது. இது இவர்கள் வீடியோக்களில் காண்பித்தது போல் எளிதல்ல.

  . இயற்கையாக முட்டை ஓடு காற்று உட்புகும்தன்மை கொண்டது. இதனால் கரு
  வளர்வதற்கு தேவையான ஆக்ஸிஜனும், அவைகளுக்கு தேவையான கால்சியம் போன்ற சத்துக்களையும் முட்டையின் ஓடு அளிக்கும்.

  ஆய்வு வெற்றி பெற்றது எப்படி?

  ஆனால் இந்த ஆய்வில், கருவளர்ச்சிக்கு தேவையான தட்பவெப்ப நிலையை
  இன்குபேட்டர் கொடுக்கின்றது ஒரு எளிய பாலிதின் கவர்களில் ஆக்ஸிஜன் புக
  துளையிட்டு மூடி வைத்திருக்கின்றனர். ஆனா கரு வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள்
  அவர்கள் செலுத்தியிருக்க வேண்டும். சிறிது வளர ஆரம்பித்ததும், அதனை வேறு
  கலத்தில் மாற்ற வேண்டும். முற்றிலும் பாதுகாப்பான, சுகாதாரமான சூழ் நிலையில்
  மட்டுமே இது சாத்தியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

  சைவமா? அசைவமா?

  எது எப்படியோ நமக்கு தெரிய வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால்,
  நீங்கள் வாங்கும் முட்டையில் வெள்ளை செல் போன்று தெரிந்தால் அது கரு வளர்ச்சிப்
  பெற்ற முட்டை. ஆகவே அது அசைவம். அந்த வெள்ளை செல்
  தெரியவில்லையென்றால் அது சைவம் .. ( நாம இப்படிக்கா போவோம்)

  SHARE

  உங்க கருத்தை தெரிவிக்கலாம்