சமூக வலைதளங்களில் இது போன்ற பதிவுகளை போடுபவரா? ஜாக்கிரதை!!!

இன்றைய சூழலில் பெரும்பான்மையானவர்களுக்கு, தங்களது வாழ்க்கை பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு நிறைய லைக்ஸ் பெற வேண்டும் என்பது விரும்பமாகிவிட்டது. இது வெறும் பொழுதுபோக்காக மட்டுமின்றி காலையில் எழுந்து பல் துலக்குவது மற்றும் குளிப்பது போன்ற ஒரு அத்தியாவசியமான ஒரு காரியமாகிவிட்டது.

இந்நிலையில் எது மாதிரியான பதிவுகளை எல்லாம் சமூக வலைதளங்களில் போட கூடாது என்ற விளிப்புணர்வு என்பது அனைவருக்கும் இருக்க வேண்டிய ஒரு விளிப்புணர்வு ஆகும். அதிலும் முக்கியமாக திருமணமான அல்லது காதலிப்பவர்கள் காதல் பெருக்கெடுத்த ஆனந்தத்தில் தேவையில்லாத பதிவுகளை சமூக வலைதளங்களில் போடுவதை தவிர்க்க வேண்டியது அவசியமாகும். இந்த பகுதியில் சமூக வலைதளங்களில் போடக் கூடாத பதிவுகள் என்னென்ன என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

உறவு கொண்டாட்டம்

பொதுவாக சமூக வலைதளங்களில் திருமணமாகி, 100 நாட்கள் ஆகிவிட்டன.. 6 மாதங்கள் ஆகிவிட்டன.. 8 மாதங்கள் ஆகிவிட்டன.. 221 நாட்கள் ஆகிவிட்டது என்பது மாதிரியான பதிவுகளை பார்க்கலாம். இது அந்த நாளின் ஆனந்தத்தை அனுபவிப்பதை விட்டு விட்டு, உங்களது உறவின் நெருக்கத்தை அடுத்தவர்களுக்கு காட்டுவது மாதிரியான ஒரு விசயமாக மாறிவிடும். இன்று முதல் முத்தம் கொடுத்த நாள்.. முதல் முதலாக சந்தித்த நாள் என்று எல்லாம் பதிவிடுவது உங்களுக்கு வேண்டுமானால் முக்கியமான விஷயமாக இருக்கலாம். மற்றவர்களுக்கு தேவையற்ற விஷயம். எனவே இது போன்ற பதிவுகள் வேண்டாம்.

பரிசுகள் பற்றிய விளம்பரம்

உங்களது துணைக்கு நீங்கள் விலை அதிகமாக உள்ள ஒரு பொருளை பரிசாக கொடுத்தால், அதனை பற்றி சமூக வலைதளங்களில் பதிவிடுவது என்பது வேண்டாம். இது உங்களுக்கும் பிரச்சனை.. அடுத்தவருக்கும் பிரச்சனை தான்.. எனவே இந்த பெருமைகள் வேண்டாம்.

சண்டைகள் பற்றிய பதிவு

நமது மக்களுக்கு சந்தோஷமோ, துக்கமோ அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டே ஆக வேண்டும்.. உறவுகளுக்குள் சண்டைகள் வருவது என்பது இயற்கையான ஒரு விஷயம் தான்.. அதை எல்லாம் ஒரு பதிவாக போடாதீர்கள். இது உங்களது உறவை பற்றிய தவறான கண்ணோட்டத்தை பிறருக்கு உண்டாக்கும். உங்கள் இருவரது மீதுள்ள மரியாதையை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

அனுமதி அவசியம்

சமூக வலைதளங்களில் யாருடைய புகைப்படத்தை போட்டாலும், அவர்களுடைய அனுமதியை பெற வேண்டியது அவசியமாகும். அவ்வாறு அனுமதியின்றி போடுவது உங்களது நன்மதிப்பை கெடுப்பதோடு, உங்களுக்கு இடையில் உள்ள உறவையும் கெடுத்துவிடும்.

துணையுடன் எடுத்த போட்டோ

உங்களது முன்னால் காதலன் அல்லது காதலியை நீங்கள் உங்களது பிரண்ட் லிஸ்ட்டில் வைத்திருந்தால், உங்களது துணையுடனான போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடாதீர்கள். இது அவருக்கு கடுப்பாக இருக்கும். இதனால் உங்களது வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனையை உண்டாக்கிவிட கூடும். உங்களது புகைப்படங்கள் உங்களது நண்பர்கள் மூலமாகவும் அவருக்கு செல்லலாம் எனவே ஜாக்கிரதை.

பயணங்கள் பற்றிய அறிவிப்பு

உங்களது விடுமுறை கொண்டாட்டத்திற்கு இங்கு செல்ல இருக்கிறேன்.. அங்கு செல்ல இருக்கிறேன் என்பது போன்ற பதிவுகளை இடுவது வேண்டாம்.. உங்களுக்கு வேண்டாதவர்கள் அல்லது முன்னால் காதலன் அல்லது காதலி அந்த இடத்திற்கு வந்து உங்களுக்கு பிரச்சனையை உண்டாக்க கூடும்.

பிரேக் அப்

பிரேக் அப் என்றாலே உடனே அதனை சமூக வலைதளங்களில் போடுவது இப்போது டிரெண்ட் ஆகிவிட்டது.. அதற்கு உங்களது நண்பர்கள் எல்லாம் சேர்ந்து உங்களது காதலன் அல்லது காதலியை திட்டுவதும் ஃபேசனாகி விட்டது. இப்படி எல்லாம் செய்து கொண்டிருந்தால் உங்களது காதல் மீண்டும் இணைவதற்கு வாய்ப்பே கிடையாது எனலாம்.

 

இன்பாக்ஸ் ஷேர் செய்வது

இன்பாக்ஸில் சாட் செய்வதே இருவருக்குள் மட்டும் அந்த விஷயம் இருக்க வேண்டும் என்று தான்.. அதனை சமூக வலைதளங்களில் போட்டு பெருமைப்படுவது எதற்கு? இப்படி எல்லாம் செய்தால் உங்களது நண்பர்கள் உங்களுடன் சாட் செய்யவே அஞ்சுவார்கள்..

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்