பெண்கள் இந்த விஷயங்களை எல்லாம் வெளிப்படையா பேச மாட்டாங்க பாஸ்!

ஆண்கள் பலரின் வாயில் இருந்து அடிக்கடி வரும் வார்த்தைகளில் ஒன்று இந்த பொண்ணுகள புரிஞ்சுக்கவே முடியலப்பா.. என்பது தான்.. என்ன தான் அதி புத்திசாலியான ஆணாக இருந்தாலும் கூட பெண்களின் மனசை முழுதாக புரிந்து கொள்ள முடியாது.

பெண்கள் பொதுவாக அனைத்து விஷயத்தையும் வெளிப்படையாக எல்லாம் சொல்லிக் கொண்டு இருக்க மாட்டார்கள்.. அவர்கள் வாயை திறந்து சொல்லாவிட்டாலும் கூட, அவர்கள் சொல்ல வருவதை புரிந்து கொண்டு ஆண்கள் செயல்பட்டால் தான் ஆண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.. ஆனால் பல ஆண்கள் இந்த விஷயத்தில் தத்தியாக தான் இருப்பார்கள்.. சில ஆண்கள் மட்டுமே கச்சிதமாக பெண்களின் கண் அசைவிற்கு பின் உள்ள பல கதைகளை அறிந்து செயல்படுவார்கள்.. இப்படிப்பட்ட ஆண்களை தான் பெண்களும் விரும்புகிறார்கள்.

பெண்கள் சில விஷயங்களை வெளிப்படையாக பேசி விடுவது கிடையாது. அதற்காக நீங்கள் வெளிப்படையாக பேசும் வரையில் காத்திருப்பது மிகப் பெரிய முட்டாள் தனமாகும். அதற்குள் அந்த பெண்ணை உங்களது வாழ்க்கையில் இருந்தே இழந்துவிடவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்த பகுதியில் பெண்கள் உங்களிடம் வெளிப்படையாக பேசாத சில விஷயங்களை பற்றி காணலாம்.

இரகசியம்

நீங்கள் உங்களுடன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் மீது ஈர்ப்பு கொண்டிருந்தால், அதை வெளிப்படையாக எந்த பெண்ணும் கேட்க மாட்டார்கள். நீங்கள் அவர்களிடம் பேசும் விதத்தினை வைத்தே உங்களை பற்றி அவர் முடிவு செய்து விடுவார். அதன் பின்னர் உங்களை கூர்ந்து கவனிக்க தொடங்கிவிடுவார்கள். நீங்கள் அவர்களுக்கு இது பற்றி எல்லாம் தெரியாது என்று நினைத்து கொண்டு பிரச்சனை வெடிக்கும் வரை காத்திருக்காமல் மற்ற பெண்களிடம் கடலை போடுவதை எல்லாம் நிறுத்திக் கொள்வதே சிறப்பு..!

Woman with arms crossed is sulking while her partner is talking to her

புரிந்து கொள்ளுங்கள்

என்ன தான் உங்களது மனைவி அல்லது காதலி உங்களது பெற்றோர்கள் மீது அன்பை பொழிந்தாலும் கூட, நேரம் கிடைக்கும் போது அவருடைய பெற்றோர்களுடன் தான் நேரத்தை செலவழிக்க விரும்புவார்கள். இதனை அவர் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் கூட, நீங்களே புரிந்து கொண்டு அவரது விருப்பத்திற்கு விட்டுவிடுவது நல்லது.

பரவாயில்லை

பரவாயில்லை என்று ஒரு பெண் கூறினால், அதற்கு நேரடியான அர்த்தம் அது கிடையாது. நீங்கள் அவரை திருப்திப்படுத்த ஏதேனும் செய்ய வேண்டும் என்று அர்த்தம். அவருக்கு மேலும் என்ன தேவை என்பதை நீங்கள் தான் உங்களது புத்தி கூர்மையால் அறிந்து கொள்ள வேண்டும்.

பரிசுகள்

பெண்களுக்கு பரிசுகள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் அவர்கள் அதனை உங்களிடம் இருந்து நேரடியாக கேட்டுக் கொள்ள மாட்டார்கள். நீங்கள் தான் அவர்களின் தேவை அறிந்து அடிக்கடி பரிசுகளை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டியது அவசியமாகும்.

பரிசுகள் வாங்கி கொடுத்தால் தான் காதலா? பரிசுக்காக தான் காதலா என்று எல்லாம் முடிவு கட்டி விடாதீர்கள்.. பரிசுகள் என்பது நீங்கள் அவர்களை எவ்வளவு காதலிக்கிறீர்கள் என்பதையும் அவர்கள் உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் தான் குறிக்கும். சின்ன பூ வாங்கி கொடுத்தால் கூட பெண்கள் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வார்கள்.

சுய சுத்தம்

பெண்கள் சுத்தமாக இருக்கும் ஆணை தான் விரும்புவார்கள். காதல் செட் ஆகும் வரையில் ஒரு மாதிரியாகும், காதல் செட் ஆன பின்னர் ஒரு மாதிரியாகவும் இருக்கும் ஆண்களை பெண்கள் விரும்ப மாட்டார்கள்.
நகங்களை வெட்டுதல், முடியை திருத்திக் கொள்வது, அழுக்கான ஆடையை அணியாமல் இருப்பது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.

கேட்டு செய்யுங்கள்

வீட்டில் முடிவு எடுப்பவர் நீங்களாகவே இருந்தாலும் கூட, என் மனைவியை கேட்டு சொல்கிறேன் என்று மனைவிக்கு மரியாதை கொடுங்கள். இதனை பெண்கள் வெளிப்படையாக கேட்காவிட்டாலும் கூட, தன் கணவன் தன்னை மதித்து நடத்த வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் விருப்பமாக இருக்கும்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்