கல்யாணத்துக்கு முன் ஆண்கள் கண்டிப்பா இந்த விஷயங்களை செஞ்சே ஆகனும்!!

திருமணம் என்பது ஒருவரை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்வதாகும். நீங்கள் திருமணத்திற்கு தயாராகி வரும் ஒருவரா? அப்படி என்றால் நீங்கள் திருமணத்திற்கு தயாராவதற்கு முன்னால் ஒரு சில விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டியது அவசியமாகும்.

அதை எல்லாம் அப்பறம் பாத்துக்கலாம் என்று நீங்கள் விட்டுவிட்டால், இது போன்ற உணர்வுகளை வேறு எப்போதுமே அனுபவிக்க முடியாமல் போய்விடும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த பகுதியில் திருமணம் செய்து கொள்ள போகும் ஆண்கள் தங்களது வாழ்க்கையில் முக்கியமாக செய்ய வேண்டிய சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

எப்படி பேசுவது?

ஒரு பெண்ணிடம் எப்படி பேசுவது, எப்படி உங்களது உணர்வுகளை அவரிடம் வெளிப்படுத்துவது என்பது போன்றவற்றை பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக முக்கியமான விஷயமாகும்.. எனவே இதை திருமணத்திற்கு முன்பே கற்றுக் கொள்ளுங்கள்.

இதை பழகிக் கொள்ளுங்கள்

திருமணத்திற்கு முன்பே ஒரு பெண்ணிடம் எப்படி பழகுவது என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மனைவியாக வர போகும் பெண்ணுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்பதை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

சமையல்

திருமணத்திற்கு முன்னர் பெண்கள் மட்டும் அல்ல. ஆண்களும் கூட சமைக்க கற்றுக் கொள்ள வேண்டியது என்பது அவசியமான ஒன்றாகும். ஆண்கள் சமைக்க கொண்டால் தான், திருமணத்திற்கு பிறகு புதுப்புது சமையலாக செய்து அவ்வப்போது உங்களது மனைவியை அசத்த முடியும். அதுமட்டுமின்றி, உங்களது மனைவி ஊருக்கு செல்லும் போது சமையல் செய்து சாப்பிடவும் உதவியாக இருக்கும்.

நிதி நிலைமை

திருமணத்திற்கு முன்னர் உங்களது நிதி நிலைமையை சரி செய்யுங்கள். ஏதேனும் கடன்கள் இருந்தால், அதை அடைக்கும் வழியை பாருங்கள். எதிர்காலத்தில் வங்கி கணக்குகளில் பணம் அதிகமாக இருக்க வேண்டியது என்பது அவசியமான ஒன்றாகும்.

குடும்ப நிர்வாகம்

திருமணத்திற்கு முன்னரே ஒவ்வொரு ஆணும், குடும்பத்தை நிர்வாகிப்பது எப்படி என்பது பற்றி அறிந்திருக்க வேண்டியது என்பது அவசியமாகும். உங்களது மனைவி பணத்தை சேமிக்க விரும்பினால், நீங்கள் ஊதாரித்தனமாக பணம் செலவளிக்க கூடாது. சேமிக்க கற்றுக் கொள்ளுங்கள். தேவையான பொருட்கள் எது, தேவையில்லாதது எது என்று பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். தேவையானவற்றிற்கு மட்டும் செலவளிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

தீய பழக்கங்கள்

புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களை கைவிடுங்கள். சிகரெட் துண்டுகளை அங்காங்கே போடுவது போன்றவற்றை கைவிடுங்கள்.

பொருட்களை வாங்குவது

உங்களுக்கு பிடித்தமான மற்றும் வேண்டிய பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள், ஏனெனில் உங்களுக்கு வரப்போகின்ற மனைவி அது எதற்கு, இது எதற்கு என்று நீங்கள் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதை தடுத்துவிட கூடும். அது மட்டுமின்றி குடும்பம் என்று வந்த பிறகு நீங்கள் சுய நலமாக வாழ்ந்து விட முடியாது.

படங்கள் பார்ப்பது

உங்களுக்கு பிடித்தமான படங்களை பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். முக்கியமாக சண்டை மற்றும் த்ரில் படங்களை பார்த்துக் கொள்ளுங்கள். திருமணத்திற்கு பிறகு இது போன்ற படங்களை இப்போது பார்க்கும் போது கிடைக்கும் அதே த்ரில் உடன் பார்க்க முடியும் என்பதில் எந்த நிச்சயமும் கிடையாது.

உறுதி கொடுப்பது

திருமணத்திற்கு பிறகு நான் உங்களுக்கு இது செய்வேன், அதை செய்வேன் என்று எந்த நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாக்குறுதி போன்றவற்றை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் ஒருவேளை திருமணத்திற்கு பிறகு அதனை செய்யவே முடியாமல் கூட போகலாம்.

நண்பர்களுடன் அவுட்டிங்

பழைய நண்பர்கள், பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களை எல்லாம் ஒரு முறை சந்தித்துக் கொள்ளுங்கள். அந்த சந்திப்பில் உங்களது திருமணம் பற்றியும் உங்களது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களது நண்பர்களுக்கு நேரிலேயே சென்று உங்களது திருமண அழைப்பிதளையும் கொடுங்கள்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்