செவ்வாய் தோஷம் இருந்தால் பரிகாரம் செய்ய எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்?

0
1327

செவ்வாய் தோஷம் உள்ளவர்களை செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் அறிவுறுத்துகின்றனர். செவ்வாய் தோஷத்தினாலேயே திருமணம் தள்ளிப் போனவர்கள் நிறைய உண்டு. செய்வ்வாய் தோஷம் கழிக்க நீங்கள் பரிகாரங்களும், கோவிலுக்கும் சென்று வந்தா அதன் வீரியத்தை குறைக்கலாம் என ஜோதிடம் சொல்கிறது.

தானமாக கொடுக்க வேண்டிய பொருட்கள் :

செவ்வாய்க்குரிய கடவுளான முருகனை வழிபடுங்கள். வெண்மைப் பொருட்களை தானமாக கொடுப்பது நல்லது. வெள்ளை எள், துவரை, வெள்ளிய எள்ளினால் செய்த பலகாரங்கள் போன்றவற்றை செவ்வய கிழமைகளில் ஏழைகளுக்கு தானமாக தரலாம்.

துவரை தானம்:

உடைக்காமல் இருக்கும் முழுத்துவரையை சிகப்புத்துணியில் பொட்டலம் கட்டிக் கொள்ள வேண்டும்.இவற்றுடன் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், வாழை பழம் ஆகியவற்றையும் சேர்த்து கண் சிவந்த வேதியரிடம் தானம் கொடுக்க வேண்டும்.

செல்ல வேண்டிய கோவில் :

வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை வணங்கி வர விரைவில் தடைபட்ட திருமணம் நடக்கும்.

சீர்காழி அருகே உள்ள தையல்நாயகி அம்மன் மற்றும் வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் செவ்வாய் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமாரசுவாமி, தன்வந்திரி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் ஆகிய சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

செய்ய வேண்டிய பரிகாரம் ;

செவ்வாய் தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்து அரசமரத்தடி விநாயகர், ஆதி வைத்தியநாதரை வழிபட்டு ஆலமரத்தை சுற்றி வரவேண்டும். வைத்தியநாதசுவாமி, தையல்நாயகிஅம்மன், செவ்வாய்க்கு அதி தேவதையான முருகப்பெருமானை வழிபடவேண்டும். அங்காரகன் சன்னதியில் உள்ள அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து, பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் தங்களது பெயர், நட்சத்திரம், ராசி ஆகியவற்றை கூறி, அர்ச்சனை செய்ய வேண்டும். துவரை அன்னம் நிவேதனம் செய்து வழிபட தோஷம் நீங்கும்.

SHARE