மர்மத்தை கிளப்பும் டிசம்பர் மாதம்… 2017ல் நடக்கப் போவது என்ன?

0
577

மரணங்களுக்கும் மாத கணக்குக்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றாலும் தமிழகத்திற்கு டிசம்பர் மாதம் மர்மமும், சோகமும் நிறைந்த மாதமாகவே திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் நிகழ்ந்துள்ள இயற்கை பேரழிவுகளும், தமிழக தலைவர்களின் மரணங்களும் டிசம்பர் மாதத்திலேயே நிகழ்ந்துள்ளன.

அ.தி.மு.க.வின் நிறுவனத் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான எம்.ஜி. ராமச்சந்திரன் 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதியன்று மறைந்தார்.

முன்னாள் தமிழக முதல்வரும், கடைசி இந்திய கவர்னர் ஜெனரலுமான ராஜாஜி (எ) ராஜகோபாலாச்சாரி 1972ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதியில் மறைந்தார்.

திராவிடர் கழகத்தின் தலைவர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 1973ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதியன்றே காலமானார்.

‘இசைக்குயில்’ என்று அழைக்கப்படும் பிரபல கர்நாடக சங்கீத பாடகியான எம்.எஸ். சுப்புலட்சுமி 2௦௦4ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதியில் காலமானார்.

அதே 2௦௦4ம் ஆண்டு தெற்காசிய நாடுகளை தாக்கிய சுனாமி பேரலை சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை டிசம்பர் மாதம் 26ம் தேதி கடுமையாக தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டன.

2௦௦5ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை, திருச்சி, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதில் உயிரிழப்புகளும், பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது.

 

2௦15ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி சென்னையில் வரலாறு காணாத பெருமழை பெய்தது. மட்டுமின்றி சென்னை உள்பட காஞ்சிபுரம், கடலூர் ஆகிய கடலோர மாவட்டங்களில் பயங்கர வெள்ளம் ஏற்பட்டது. இதிலும் பலர் உயிரிழந்தனர். பொருளாதார பாதிப்புகள் அதிகமாக இருந்தது.

2௦16ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி இரவு 11:3௦ மணி அளவில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா மரணம் அடைந்தார்.

ஜெ., மரணம் அடைந்த அடுத்த இரண்டு நாட்களிலேயே 7ம் தேதியன்று மூத்த பத்திரிக்கையாளரும், நாடக ஆசிரியரும், ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பருமான சோ ராமசாமி காலமானார்.

கடந்தாண்டே டிசம்பர் மாதம் 11ம் தேதி வர்தா புயல் சென்னையை கடுமையாக சூறையாடியது. இந்தாண்டு டிசம்பர் துவங்கும் நிலையில் குமரி அருகே புயல் சின்னம் ஏற்பட்டிருக்கிறது.

 

தமிழ்நாட்டையே புரட்டிப் போட்ட 6 சக்தி வாய்ந்த புயல்கள்!