அதிர்ஷ்டமாய் கொட்ட வைக்கும் தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்!

0
2910

இந்த தமிழ் புத்தாண்டு பிறக்கும்போது மேஷத்தில் சூரியன், சுக்கிரன், கடகத்தில் ராகு, மகரத்தில் கேது, துலாமில் குரு, தனுஷில் செவ்வாய், சனி, மீனத்தில் சந்திரன், புதன் அமர்ந்திருக்க பிறக்கிறது. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் உண்டான பலன்களை இங்கே பார்க்கலாம்.

மேஷம்:
புத்தாண்டு பிறக்கையில் மேஷ ராசியின் உச்சத்தில் சூரியன் இருக்கிறார் என்பதால் ஆண்டின் தொடக்கத்தில் சிறு சிறு கஷ்டங்கள் இருக்கலாம். என்றாலும் சனி பகவானின் அருளால் நிறைய நன்மைகள் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிப்பு கையில் தங்கும். வேலை கிடைக்காதவர்கள், முதலீட்டிற்காக எதிர்ப்பார்ப்பவர்களுக்கு அவரவர் எதிர்நோக்கும் பலன்கள் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு இந்தாண்டில் வரன் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் கைக்கூடும்.

ரிஷபம்:
புத்தாண்டின் ஆரம்பத்தில் குருவில் சஞ்சாரத்தால் சில சங்கடங்கள் நேர்ந்தாலும், பின்னாளில் தொட்டதெல்லாம் பொன்னாக மாறும். குறிப்பாக புரட்டாசிக்குப் பிறகு நல்ல பலன்களை கொடுப்பார் குருபகவான். திருமணம் கைகூடும். நீண்ட நாள் பிரச்சினைகள், வழக்குகள் எல்லாம் தீரும் காலம் வந்துவிட்டது என்றே சொல்லலாம். புதுமனை வாங்கக்கூடிய யோகம், வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சொத்துக்கள் வாங்கும்போது நன்கு விசாரித்துவிட்டு வாங்க வேண்டும். தாய்-தந்தையர் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். அலுவலகத்தை பொறுத்தவரை கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

மிதுனம்:
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் அதிர்ஷ்ட காற்று இனி உங்கள் வீட்டை நோக்கியேதான் வீசும். நீண்ட நாட்களாக உங்களை பீடித்திருந்த பிணிகள் ஓடிப்போகும். மனதில் உற்சாக அலைகள் வீசும். கண்டக சனி இருப்பதனால் உணவு, ஆரோக்கியம், பணம் ஆகிய விஷயங்களில் கவனம் தேவை. குறிப்பாக யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வருடம் இது.