தமிழ் புத்தாண்டு ராசிபலன் [துலாம் முதல் மீனம் வரை]

0
3283

துலாம்:
ஜென்ம ராசியில் அமர்ந்திருக்கும் குருவால் இவ்வருடத்தின் ஆரம்பத்தில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும், குரு பார்வையால் சிறு நன்மைகள் கிடைக்கும். அக்டோபர் மாதத்திற்கு பின் தன ஸ்தானத்தில் அமரும் குருவினால் பணம், செல்வம், சொத்துக்கள் சேர வாய்ப்பு இருக்கிறது. சுக்கிரன் உங்கள் ராசியை பார்ப்பதினால் உங்களுக்கான அடிப்படை வசதி வாய்ப்புகள் பெருகும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். அதிர்ஷ்டமாக சொத்துக்கள் சேர்க்கும் வாய்ப்புக்கள் ஏற்படும்.

விருச்சிகம்:
உங்கள் ராசியின் விரைய ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்திருப்பதால் ஓரளவு பணக்கஷ்டம் இருக்கலாம், ஆனால் புரட்டாசிக்கு பின் உங்களது ஜென்ம ராசியில் குரு வரும்போது அதிக நன்மை உண்டாகும். திருமணம், சீமந்தம் போன்ற சுபசெலவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. உங்கள் குடும்பத்திலும், அலுவலகத்திலும் உங்கள் கை ஓங்கும்.

தனுசு:
உங்கள் ராசியின் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குரு பகவான் தொடர்ந்து அங்கேயே அமர்வார் என்பதால் உங்களது புது வித முயற்சிகள் எல்லாம் பலிதமாகும். வெற்றியை நோக்கி செல்வீர்கள். இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் ராசியிலேயே அமர்ந்திருப்பார் என்பதால் சிலருக்கு புதுமனை அல்லது வீடு வாங்கும் சூழல் உருவாகும். அவ்வப்போது உடல் நலம் பாதிக்கும் என்பதால் உணவு, உடற்பயிற்சி போன்ற ஆரோக்கிய விடயங்களில் கவனம் தேவை. சுயமாக முடிவு எடுப்பது உங்களுக்கு சாதகமான வெளியீடுகளை பெற்றுத்தரும்.

1
2
SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்