ஸ்மார்ட் கார்டு இல்லையென்றால் இனி ரேஷன் ‘கட்’!

0
14938

வரும் 2௦18ம் ஆண்டு முதல் ஸ்மார்ட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

டிசம்பர் 31க்குள் நீங்கள் இதை கட்டாயமாக செய்ய வேண்டும்....! #AadharDeadlines ஆதார் இணைப்பு:

தமிழகத்தில் உள்ள 1 கோடியே 95 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கடைகளை நவீன மயமாக்கும் வகையில் அண்மையில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது ஸ்மார்ட் கார்ட். இதற்காக ஆதார் எண்களை குடும்ப அட்டையுடன் இணைக்க ஆணையிடப்பட்டது. பல சிக்கல்கள், குழப்பங்களுக்கு மத்தியில் இந்த திட்டம் ஓரளவு முடிவடைந்துள்ளது. ஆதார் இணைப்பை தொடர்ந்து இப்போது ஸ்மார்ட் கார்ட் வழங்கும் பணிகள் நடந்தது வருகின்றன.

ஸ்மார்ட் கார்டு இல்லையென்றால் இனி ரேஷன் 'கட்'!ஸ்மார்ட் கார்டு:

இதுவரை சுமார் 1.5௦ கோடி பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்றாலும் மேலும் 45 லட்சம் பேருக்கு இன்னும் வழங்கப்படவில்லை என அரசு அறிக்கை தெரிவிக்கிறது. அதில் 25 லட்சம் பேர் தற்போதே ஸ்மார்ட் கார்ட் பெற விண்ணப்பித்துள்ளனர். மீதமுள்ள 2௦ லட்சம் பேர் இதுவரை விண்ணப்பிக்கவில்லை. இவர்கள் இன்னும் ஆதார் இணைப்பையும் செய்யவில்லை. எனவே அந்த 2௦ லட்சம் ரேஷன் கார்டுகளும் போலியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 

ஸ்மார்ட் கார்டு இல்லையென்றால் இனி ரேஷன் 'கட்'!2௦ லட்சம் போலி:

போலியாக எண்ணப்படும் இந்த 2௦ லட்ச ரேஷன் கார்டுகளை உடனடியாக ரத்து செய்யப்பட மாட்டாது என உணவுப்பொருள் வளங்கள் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அவைகளுக்கு மீண்டும் உரிய கால அவகாசம் வழங்கப்படும் என்றும், அதன் பின்னரும் ஆதார் இணைப்பு செய்யப்படவில்லை என்றால் மட்டுமே அவை ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 31 தான் கடைசி தேதி… இதை எல்லாம் கட்டாயமாக செய்தாக வேண்டும்!