விஜய் சேதுபதி மீது திரைதுறையினர் கோபம்… அவரா இப்படி செய்யதார்..!

0
2641
விஜய் சேதுபதி மீது திரைதுறையினர் கோபம்... அவரா இப்படி செய்யதார்..!

தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகர் விஜய் சேதுபதி ஒவ்வொரு படத்திற்கும் வித்யாசத்தை கொடுப்பார். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அனைவரும் மதிக்கக் கூடிய நபராகவும் இருந்து வருகிறார். பல நல்ல செயல்களை செய்துவருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

தற்போது தமிழ் திரையுலகம் ஸ்ட்ரைக் நடத்தி வருகின்றனர். இதில் பலரும் பங்கேற்று தங்களது படப்பிடிப்பை நிறுத்தியுள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படம் உட்பட 4 படங்களுக்கு மட்டும் படப்பிடிப்பு நடத்த சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது. இது திரைத்துரைச் சார்ந்தவர்களால் கடும் எதிர்ப்பு அலைகள் கிளம்பின.

ஏற்கெனவே படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த சில படங்களின் படப்பிடிப்புகளை கூடுதலாக ஓரிரு நாட்கள் நடத்த அனுமதி கேட்டால் பரிசீலிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி 4 படங்களின் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் விஜய் சேதுபதி தனது ‘ஜுங்கா’ படக்குழுவினருடன் போர்ச்சுக்கல் நாட்டில் படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். தொடர்ந்து இங்கு 10 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது. ஸ்ட்ரைக் நடக்கும் நேரத்தில் இவர்கள் இப்படி செய்தது. திரையுலகினர் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்