சூர்யாவுடன் ஜோடி சேரும் சாய் பல்லவி!

0
423
சூர்யாவுடன் ஜோடி சேரும் சாய் பல்லவி!

செல்வராகவன இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 12-ம் தேதி வெளியீட்டிற்கு மும்முரமாக பணிபுரிந்து வருகிறது படக்குழு. அதனைத் தொடர்ந்து செல்வராகவன் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சூர்யா. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தீபாவளி 2018-க்கு வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. ‘கரு’ படத்தைத் தொடர்ந்து ‘மாரி 2’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிருக்கும் சாய்பல்லவி தற்போது செல்வராகவன் – சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்தில் ஹிரோயினியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். சூர்யா படத்தில் நடிக்கவிருக்கிறேன் என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து செல்வராகவன் பட நாயகி ரகுல் தான் என்று தகவல் வெளியானது. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது படக்குழு.