சுக்கிரன் இடம்பெயர்கிறார்… 12 ராசிகளுக்கும் என்னென்ன யோகங்கள் கிடைக்கும்?

0
1502

ஆடம்பரத்தையும், அழகையும் வாரி வாரி வழங்கக் கூடியவர் சுக்கிரன். சுக்கிரனின் திசை இருந்தால் திருமண வாழ்க்கை, செல்வந்தர் ஆவது போன்ற யோகங்கள் கிடைக்கும். சுக்கிரனின் அருள் பெறும் ஒருவர் அதிக கவர்ச்சி உடையவராகவும், கவனத்தை ஈர்ப்பவராகவும், திறமை மிகுந்தவர்களாகவும் இருப்பார்கள்.

சுக்கிரன் இன்று முதல் நெருப்பு ராசியான மேஷ ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதன் பலாபலனாக சில ராசிகளுக்கு யோக, போகங்களும், சில ராசிகளுக்கு பாதிப்புகளும் ஏற்படலாம். 12 ராசிகளுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை இனி பார்ப்போம்.

மேஷம்:
உங்கள் ராசிக்கு 12வது இடத்தில் அமர்ந்து சுப செலவுகளை கொடுத்த சுக்கிரன் இன்று முதல் உங்கள் ராசியிலேயே நேரடியாக அமர்கிறார். வார்த்தைகளில் நளினமும், வாக்கு வன்மையும் கூடும். அழகு அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்கள் குவியும். வாழ்க்கை துணையுடனான தாம்பத்திய உறவு மேம்படும். வாகனங்கள், வீடு, மனைகள் நல்ல விலைக்கு விற்று காசு பார்க்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் அதிகரிக்கும்.

 

ரிஷபம்:
உங்கள் ராசிக்கு 12வது இடத்தில் அமரப் போகிறார் சுக்கிர பகவான். உங்களுக்கு கொஞ்சம் சுமார் நிலைதான். வாழ்க்கை துணையின் மூலம் செலவுகள் ஏற்படும் என்பதால் பர்ஸை பதப்படுத்தி வைக்கவும். மற்றவர்களின் யோசனையை கேட்டு நடந்தால் நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை. சத்தான உணவுகளை உண்டு, உடற்பயிற்சி செய்து நலம் காக்கவும். செலவுகள் ஏற்பட்டாலும் கணிசமான பணவரவு அதிகரிக்கும்.

மிதுனம்:
உங்கள் ராசிக்கு 11வது இடமான லாப ஸ்தானத்தில் அமர்கிறார் சுக்கிரன். எனவே இந்த ஆண்டு உங்களுக்கு யோகமோ யோகம்தான். பணம், வாகனம் வாங்குவீர்கள். திருமணம் நடந்தேறும். திருமணம் ஆனவர்களுக்கு நல்ல முறையில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் வீடு, மனை சொத்துக்கள் வாங்குவீர்கள்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்