மழையால் இடிந்து விழுந்து தாஜ்மஹாலின் கலசம்

0
631

வட இந்திய மாநிலமான உத்திரபிரதேசத்தில் கனமழை பெய்ததில் தாஜ்மஹாலின் கலசம் ஒன்று விழுந்து உடைந்திருக்கிறது.

உத்திரபிரதேசத்தில் மதுரா மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் காற்று பலமாக வீசியதால் நகரில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. மரங்கள் வேரோடு சாலையில் விழுந்தன. இதனால் மின்சார துண்டிப்பும் ஏற்பட்டது. பல்வேறு உட்கிராமங்களில் ஆங்காங்கே மண்சரிவும், கட்டுமான சேதங்களும் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த கனத்த மழையின் போது, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலில் தூண் ஒன்று இடிந்து விழுந்திருக்கிறது. அதன் மேல் பொருத்தப்பட்டிருந்த கலசமும் கீழே விழுந்து உடைந்துள்ளது. இது சுற்றுலா பயணிகள் மற்றும் இந்திய பாரம்பரிய விரும்பிகளிடம் கவலையை உண்டாக்கி இருக்கிறது. இது குறித்து வெளியான விவர அறிக்கையை இங்கே பாப்போம்.

‘கடந்த ஏப்ரல் 11ம் தேதியன்று இரவு சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், தாஜ்மஹாலின் தெற்கு நுழைவு வாயில் பகுதியில் நிறுவப்பட்டிருந்த உலோகத்தினால் ஆன பன்னிரண்டு அடி உயரம் கொண்ட தூணில் உள்ள கலசம் திடீரென இடிந்து விழுந்தது.. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்