இலங்கையில் 10 நாட்களுக்கு ‘எமெர்ஜென்சி’ பிறப்பிக்கபட்டுள்ளது..!

0
85

கடந்த மாதம் 27ஆம் தேதியன்று இலங்கையில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால் அவர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் சிங்கள இளைஞர்கள் சிலர் இறந்தனர் பலரும் படுகாயம் அடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த சிங்களர்கள் கலவரத்தில் ஈடுப்பட்டனர். இதில் இஸ்லாமியர்களின் வீடுகள் கடைகள் என அடித்து உடைத்து தீயிட்டு கொளுத்தினர். சிங்களர் மற்றும் இஸ்லாமியர்களின் மோதல் காரணமான ஏற்பட்டுள்ள இந்த கலவரத்தால் அங்கு கண்டியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று காலை முதல் இன்று காலை 6 மணிவரை கண்டியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இலங்கையில் 10 நாட்களுக்கு அவரச நிலை பிறப்பிக்கபட்டுள்ளது..!

இருப்பினும் அங்கு கட்டுபாட்டில் வரவில்லை. நாட்டின் பிறபகுதியிலும் கலவரம் உருவாக வாய்ப்பு உள்ளதால் தற்போது அங்கு இலங்கை முழுவதும் 10 நாட்கள் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அமைச்சர் திஸ்ஸநாயகே தெரிவித்தார்.

அதனால் ஊடகங்களுக்கும் அங்கு கட்டுபாடுப் போடப்பட்டுள்ளது. கலவரத்தை துண்டும் விதமாக எந்த செய்தியும் வெளியிட கூடாது எனவும் கட்டுபாடு அங்கு போடப்பட்டுள்ளது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்