டெல்லியில் காற்று மாசு…. முகமூடி கட்டிக்கொண்டு விளையாடிய இலங்கை வீரர்கள்!

0
142

டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா இலங்கையிலான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் வீரர்கள் மைதானத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் 3 முறை ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.

முகமூடி ஆட்டம்:

இந்தியா இலங்கை இடையியே 3வது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் 3வது டெஸ்ட் தொடர் நடைப்பெற்று வருகிறது. உணவு இடைவெளிக்கு பிறகு களம் இறங்கிய இலங்கை வீரர்கள் 5 பேர் முகமுடியுடன் விளையாடினர்.

 

3 முறை தடை;

அப்பொழுது காற்று மாசு காரணமாக வீரர்களுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டது. முச்சு திணறல் ஏற்படுவதாக வீரர் லகிரு கமகே குற்றஞ்சாட்டினர். தொடர்ந்து மற்ற வீரர்களும் இதேயே கூறினர்கள். இதனால் ஆட்டம் தடைபட்டது.

இலங்கை வீரர்கள் அவதி:

பின்னர் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் விராட் கோலி அவுட் ஆனார். இதன் பிறகும் 2 முறை காற்று மாசை காரணமாக கூறி இலங்கை வீரர்கள் ஆட்டத்தை சிறிது நேரம் நிறுத்தினர். ஒரு கட்டத்தில் கமகே, லக்மல் ஆகியோர் மைதானத்தில் இருந்து வெளியேற, இலங்கை அணியின் பீல்டிங் பயிற்சியாளர் நிக் லீ, பீல்டிங் செய்ய முன்வந்தார்.

வாந்தி மயக்கம்:

ஒரு சில வீரர்களுக்கு வாந்தியும் ஏற்பட்டது. இவ்வாறாக ஆட்டம் சுமார் 26 நிமிடங்களுக்கு பாதிக்கப்பட்டது. இதனையடுத்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆட்டத்தை டிக்ளேர் செய்தார். 140 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் காற்று மாசு காரணமாக, ஒரு போட்டி இடையில் நிறுத்தப்பட்டது இதுவே முதல் முறை.