நீங்கள் தவறான ஒருவரை காதலிக்கிறீர்கள் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

0
16

நமது பருவ வயதில் வரும் காதல் ஆனது வெறும் விளையாட்டு விஷயமோ அல்லது பொழுதுபோக்கான விஷயமோ கிடையாது. பருவ வயதில் ஒருவர் சரியாக நடந்து கொண்டால் அவரது எதிர்காலம் தித்திக்கும் எனலாம். ஆனாலும் இந்த காதல் எப்படியோ வந்துவிட்டது என்றால், நாம் சரியான ஒரு நபரை தான் தேர்ந்தெடுத்து இருக்கிறோமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியது என்பது மிக முக்கியமான விசயமாகும்.

ஆரம்பத்தில் என்னவோ அழகை பார்த்து காதல் வந்து விட்டாலும் கூட, இறுதி வரையில் உடன் இருப்பது என்னவோ குணம் தான். கொஞ்ச நாட்கள் பழகிவிட்டு பிடிக்கவில்லை என்று, காதலையும் விட முடியாமல், முழுமையாக அதனை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள்.

இந்த பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் சில விஷயங்கள் நீங்கள் சரியான உறவில் இருக்கிறீர்களா இல்லையா என்பதை உங்களுக்கு உணர்த்தும். ஒருவேளை நீங்கள் தவறான உறவில் இருந்தால் அது நீண்ட நாட்கள் நீடிக்காது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

உறவுகளின் பிரிவு

சரியான உறவு என்பது உங்களுக்கு சுதந்திரத்தை கொடுக்கும். உங்களது சந்தோஷத்தை அதிகரிக்கும். ஆனால் தவறான உறவு என்பது உங்களை உங்களது நண்பர்களிடம் இருந்து பிரிக்கும். உறவினர்களிடம் இருந்து பிரிக்கும். உங்களை தனி ஆளாக நிற்க வைத்துவிடும்.

பழி போடுவது

ஒரு தவறு உங்களால் நடந்து விட்டாலும் கூட நீங்கள் அதற்கு நீங்கள் அவரை தான் குறை கூறுவீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறும் அவரால் தான் நடந்தது. அதற்கு அவர் தான் காரணம் என்று நீங்கள் காரணம் காட்டுவீர்கள். இது போன்று செய்தால் அது சரியான உறவாக இருக்காது. நீங்கள் செய்த தவறுக்கு நீங்கள் பொருப்பு ஏற்பதே சரியான ஒன்றாகும்.

குறை கூறுவது

உங்களால் முடியாத ஒரு விசயத்தை கூட செய்ய தூண்டுவது தான் உண்மையான காதல். உன்னால் முடியாது.. நீ எதற்கும் இலாயக்கு இல்லை என்று உங்களை மூலையில் ஒடுக்கி அமர செய்து விடுவது உண்மையான உறவு கிடையாது. தன்னம்பிக்கையை சிதைத்து உங்களது முன்னேற்றத்தை தவறான உறவானது முடக்கிவிடும்.

காதலுக்கு ஏது எல்லை?

உண்மையான காதலுக்கு எல்லைகள் என்று எதுவும் கிடையாது. உண்மையான காதல் என்பது காற்று போல.. எங்கும் நிறைந்திருக்கும். ஆனால் நீங்கள் இது தான் என் காதலின் எல்லை.. இதை தாண்டி நான் காதல் செய்ய மாட்டேன் என்று முடிவு செய்து விட கூடாது. அப்படி இருந்தால் அது உண்மையான உறவே இல்லை.

தாழ்த்துதல்

காதல் என்றுமே ஒருவரை உச்சத்திற்கு தான் கொண்டு செல்லும். அதை விடுத்து, நீங்கள் காதலிக்கும் ஒருவருக்காக நீங்கள் உங்களது நிலையை தாழ்த்திக் கொள்ளுதல் கூடாது. அவ்வாறு நீங்கள் உங்களை தாழ்த்திக் கொண்டு இருப்பது கூடாது.

வீண் கோபம்

உங்களது துணையை கண்டாலே உங்களுக்கு கோபம் அதிகமாக வரும். ஏன் எதற்கு என்று காரணம் இல்லாமல் கோபம் அதிகரிக்கும். இது போன்ற நிலையானது நீங்கள் சரியான ஒரு உறவில் இல்லை என்பதை குறிக்கும் அறிகுறியாகும்.

நேரம் செலவிட இயலாமை

நமக்கு பிடித்த ஒருவரை பார்க்க வேண்டும். அவருடன் பேச வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருக்கும். ஆனால் நீங்கள் தவறான உறவில் இருந்தால், உங்களுடைய துணையுடன் நேரம் செலவழிக்க பிடிக்காது. வேண்டா வெறுப்பாக தான் பேசுவீர்கள்.. எப்போது இந்த உரையாடல் முடியும் என்று நினைப்பீர்கள்.

பெருமை

நமக்கு பிடித்தமான ஒரு உறவான நமக்கு பெருமையை கொடுக்கும். அந்த உறவை நினைத்து நீங்கள் பெருமை அடைவீர்கள். ஆனால் நீங்கள் பிடிக்காத ஒருவருடன் இருந்தால் அந்த உறவை எண்ணி ஒரு போதும் பெருமை கொள்ள மாட்டீர்கள். இவர் எனது காதலன் அல்லது காதலி என்று கூறிக் கொள்ளவே சங்கடப்படுவீர்கள்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்