மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகளை எப்படி முன்கூட்டியே அறிவது?

0
18

இதய நோய்கள் ஒருமுறை தாக்கிவிட்டால் மிக எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
அதன் பின் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை அவற்றை கட்டாயம் மாற்றியே ஆக
வேண்டும்.

ஹார்ட் அட்டாக்கிற்கும் மாரடைப்பிற்கும் இருக்கும் வித்தியாசம் நிறைய பேருக்கு
தெரிவதில்லை. ஹார்ட் அட்டாக் என்பது தமனிகளில் அடைப்பு ஏற்படும்போது, இதயத்
தசைகள் ஆக்ஸிஜன் கிடைக்க வேகமாக இயங்கும்போது உண்டாகும்.

மாரடைப்பு இதயம் ரத்தத்தை பம்ப் செய்யாமலிருக்கும்போது உடலுக்குள் ரத்த ஓட்டம்
குறையும், மூச்சு விடுவதற்கு சிரமம் உண்டாகும். மாரடைப்பு வருவதற்கு முன் நமக்கு
சில அறிகுறிகள் வெளிப்படுத்தும் அதனைக் காண்போம்.

வயிற்றுப் பிடிப்பு :

மேல் வயிற்றுப்பகுதியில் பிடிப்பு ஏற்பட்டாலும், முதுகில் பிடிப்பும், சுருக்சுருக் எனக்
குத்தினாலும் வாயுப்பிடிப்பு என்று அசட்டையாக இருந்துவிடக் கூடாது. இது மாரடைப்பு
வருவதன் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம். நடக்கும்போதோ, உடற்பயிற்சி செய்யும் போதோ பிடிப்பு ஏற்படுவதும், பளுவான பொருளை தூக்கும்போது பிடிப்பு ஏற்படுவதும் மாரடைப்பு வருவதற்கான அறிகுறி.

 

பெண்களுக்கு :

பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் போது, அவர்களை இதய நோய்களில் இருந்து காக்கும் புரோஜெஸ்ட்ரான், ஈஸ்ட்ரோஜென் போன்ற ஹார்மோன்களின் சுரப்பு நிற்கிறது.

இதனால் 45 வயதுக்கு மேல் மாரடைப்பு வரும் அபாயம் அதிகம். 60 வயது தாண்டிய பெண்களில் நீரிழிவு உள்ளவர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்புண்டு.

 

வலி :

நடக்கும் போது நெஞ்சில் அழுத்தம் உருவானால், படி ஏறும் போது நெஞ்சு பிடிப்பது போல இருந்தால், தோள்பட்டையிலோ, தாடையிலோ வலி அடிக்கடி உருவானால் உடனடியாக இதய நோய் மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.

யாரை தாக்கும் அபாயம் :

வேலையில் அதிக மன உளைச்சல் உள்ளவர்களுக்கும், உயர்பதவி அனுபவிப்பவர்களுக்கும் திடீரென வேலை போய்விட்டால், அந்த அதிர்ச்சியில் மாரடைப்புவரலாம்.

வேலையில் அதிக மன உளைச்சல் உள்ளவர்களுக்கும், உயர்பதவி அனுபவிப்பவர்களுக்கும் திடீரென வேலை போய்விட்டால், அந்த அதிர்ச்சியில் மாரடைப்புவரலாம்.

தவிர்க்க வேண்டியவை :

அதிக கொழுப்புள்ள ரெட் மீட் (ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி), நெய், வெண்ணெய்
ஆகியவற்றை ஒதுக்கிவிட வேண்டும். பொரித்த உணவுகளையும் தவிர்த்து விட
வேண்டும்.

நிறைய காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிட்டாக வேண்டும். கீரைகளை
கட்டாயமாக்குங்கள். நிறைய சிறு தானியங்களை சாப்பிடுங்கள்.

SHARE