சசிகலா சொன்ன பதில் ‘வேதனையின் உச்சம்’… அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

0
12980

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களுர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு உறுப்பு செயலிழந்ததால் தீவிர மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது, எனினும் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 20ம் தேதியன்று காலமானார். இதனாலே சசிகலாவுக்கு பரோல் கிடைத்திருக்கிறது.

சிறைக்குள் செல்வாக்கு:
நீண்ட நாட்களாக சசிகலா பரோல் கேட்டு வந்துள்ளார். ஆனால் அவரது கோரிக்கைகள் ஏதுவும் ஏற்கப்படவில்லை. காரணம் பணம் பரப்பன அக்ரஹாரா சிறை வரைக்கும் கூட தாராளமாகவே பாயும் என்பதை சசிகலாவின் சிறை வாழ்க்கை நிரூபித்துவிட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவிற்கு என தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டதும், கிச்சன் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதும் சிறை அதிகாரி ரூபா மூலமாக வெளிச்சத்திற்கு வந்தது.

கதறி அழுதார்:
கடந்தாண்டு கணவர் நடராஜனை சந்திப்பதற்காக அவருக்கு பரோல் வழங்கப்பட்டு அவரை சந்தித்தார். அதன்பிறகு ஜெயலலிதாவின் நினைவு தினத்திற்கும் பரோல் கேட்டார். ஆனால் அது அசாத்தியம் ஆனது. அ.தி.மு.க நிர்வாகி புகழேந்தி மூலமாக ஜெயலலிதா புகைப்படம் ஒன்று சசிகலாவுக்கு கொடுக்கப்பட்டது. ஜெயலலிதா புகைப்படத்தில் கண்ணாடி இருக்கக் கூடாது என்பதால் லெமினேட் செய்யப்பட்ட புகைப்படம் சிறைக்குள் அதிகாரிகளின் உத்தரவின்படி அனுமதிக்கப்பட்டது. ஜெயலலிதா நினைவு நாளான நேற்று அதிகாலையில் எழுந்து தயராகிவிட்டு புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன்பிறகு சுமார் 1 மணி நேரம் ஆழ்ந்த தியானம் செய்துள்ளார். தியானம் முடிந்து கதறி அழுதுள்ளார் சசிகலா.

“நான் சிறைக்கே போயிடுறேன்”:
தற்போது பரோலில் வெளிவந்துள்ள சசிகலாவை விரைவிலேயே மீண்டும் சிறைக்கு அனுப்ப குடும்ப உறுப்பினர்கள் விரும்பவில்லை. இளவரசியின் மகன் விவேக், தான் பெங்களூர் சென்று அம்மாவை பார்த்துவிட்டு வருகிறேன் அத்தை. நீங்கள் பரோல் முடியும் வரை இங்கேயே கொஞ்சம் நிம்மதியாக இருங்கள் என்று கூறினாராம். அதற்கு பதில் அளித்த சசிகலா, ‘வேண்டாம் ப்பா, வீட்டுல நிறைய நாள் இருந்துட்டா மறுபடி ஜெயில் மனநிலைக்கு மாற ரொம்ப கஷ்டமாயிடும்’ என்று கூறினாராம். இது வேதனையின் உச்சம் என்று வார இதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் ஃபேஷன் ஃப்ரீக் நரேந்திர மோடி போட்ட பிரபல கெட்டப்கள் ஒரு பார்வை!

உங்க கருத்தை தெரிவிக்கலாம்