சனீஸ்வரர் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இதை ஃபாளோ பண்ணுங்க!

0
4190

#சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017

நீங்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்களை நீங்கள் அறிய விதி இருந்தால் மட்டுமே நடக்கும். தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா? அதை நடைமுறைப்படுத்த உங்களுக்கு ஜாதக அமைப்பு இருக்க வேண்டும்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இதை தவறாது செய்து முடித்தால், உங்களுக்கு அந்த சனிபகவான், முழு அருள் கடாட்சம் வழங்கிடுவார். உங்களுக்கு தலைமை ஸ்தானம் கிடைப்பது உறுதி.

சனீஸ்வரர் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இதை ஃபாளோ பண்ணுங்க!

பரிகாரம்:

தினமும் காலையில் ஒருகைப்பிடி அளவுக்கு உலர்திராட்சையை காகத்திற்கு அளிக்க வேண்டும். உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும், அதையே மாற்றக்கூடிய சக்தியை இந்த பரிகாரம் ஏற்படுத்தித் தரும் என்கிறார் திருவண்ணாமலை சித்தர். வன்னி மரவிநாயகருக்கு, பச்சரிசி மாவு படைத்தாலும், சனிக் கிழமைகளில் விரதம் இருந்து எள் கலந்த தயிர்சாதம் படைத்தாலும், ஒரு மிகப்பெரிய உயிர்க்கவசம் போல் பாதுகாக்கும்.

காகத்திற்கு சாதம் அல்லது உணவிடுவதால், உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள், வீண் பழி போன்றவை உங்களை நெருங்காது.
செய்வினை கோளாறுகள், தீராத கடன் தொல்லைகளை நீக்கும் சக்தி இந்த பரிகாரத்திற்கு உண்டு.

சனீஸ்வரர் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இதை ஃபாளோ பண்ணுங்க!

காக வழிபாடு:

திறந்தவெளியில் தரையை தூய்மையாக கழுவி, மெழுகிக் கோலமிட வேண்டும். அதன் மீது வாழை இலையைப் பரப்பி அதில் சித்ரான்னங்களை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கில் கைப்பிடி அளவு எடுத்துவைத்து, காக்கைகளை “கா…கா…’
என்றுகுரல்கொடுத்துஅழைக்க வேண்டும். உங்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும் பறந்துவரும். அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைத்து சாப்பிட்டுவிட்டுச் செல்லும்.

காக்கைகள் உணவினைச்சாப்பிட்டுச்சென்றதும், அந்தவாழை இலையில் பொரி, பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள், வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள். இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது நம்பிக்கை.

சனீஸ்வரர் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இதை ஃபாளோ பண்ணுங்க!

சனிபகவான் திருப்தி:

இதனால் பித்ருக்களின் ஆசியும் கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் சனி பகவானின் வாகனமான காக்கையை அன்று வழிபடுவதால் பகவானை திருப்திப்படுத்துவதாவும் இந்துக்கள் கருதுகிறார்கள். காக வழிபாடு என்பது சனிபகவானை முழுவதுமாக திருப்திப்படுத்தும். சனிப்பெயர்ச்சி நடக்கும்போது நமக்கு சிறந்த பலன்களை அள்ளி வழங்குவார் சனிபகவான்.

சனீஸ்வரர் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இதை ஃபாளோ பண்ணுங்க!

நம்பிக்கைகள்:

காலையில் நாம் எழுவதற்கு முன், காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்தக் காரியம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உண்டு. நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக் காக்கை கரைந்தால் சுப பலன்கள் உண்டு. எனவே காகங்கள் வீடு தேடி வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிடவேண்டும்.

[திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தர் சொன்ன பரிகாரமுறை இது]

சந்நியாசியாகவும் மாற மாட்டார்… அரசியலுக்கும் வர மாட்டார்… ரஜினியின் பிறந்தநாள் ஜாதகப் பலன்கள்!