சனி பகவானை சாந்தப்படுத்த சித்தர் கூறும் வழிமுறைகள்!

0
2352

சனிபகவானை சாந்தப்படுத்த நாம் செய்ய வேண்டிய பரிகார முறைகளை சித்தர்கள் கூறியுள்ளனர். அவை நாம் எளிதில் செய்ய கூடியவையே பரிகாரங்களாக ஆகும். இந்த பரிகாரங்களை செய்வதினால் சனி பகவானின் வக்கிர பார்வையில் இருந்து தப்பலாம்.

ரஜினியின் பிறந்தநாள் ஜாதகம்... பல கேள்விகளுக்கு பதில் உள்ளே!

 • தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.
 • சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல்விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்.
 • கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.
 • வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.
 • சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.

2018 புத்தாண்டு ராசிபலன்: சிம்ம ராசிக்கு இது பொன்னான வருடம்..ஸ்பெஷல் என்ன?

 • சனிக் கிழமைதோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.
 • விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
 • அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகள் குறையும்.
 • ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.
 • தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.

சனீஸ்வரர் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இதை ஃபாளோ பண்ணுங்க!

 • அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.
 • ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.
 • சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.
 • அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.
 • சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.
 • மாற்றுதிறனாளிகள், விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.