ஜஸ்டின், ட்ரம்ப், மோடியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

0
2087

சர்வதேச நாடுகளின் முன்னணி தலைவர்கள் வாங்கும் சம்பள விவரங்கள் குறித்த பட்டியல் வெளியாகியிருக்கிறது. கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பெற்று வரும் சம்பளத்தின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

லீ ஹெய்சன்:
சிங்கப்பூர் நாட்டின் பிரதமர் லீ ஹெய்சன் லூங் உலகிலேயே அதிக சம்பளம் பெற்றுவரும் தலைவராக திகழ்கிறார். வருடத்திற்கு 1.6 மில்லியன் டாலர் பெற்று வருகிறார்.

டொனால்ட் ட்ரம்ப்:
இரண்டாவது இடத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இருக்கிறார். $4,000 டாலர் சம்பளத்தை ட்ரம்ப் பெற்று வருகிறார்.

ஜஸ்டின் ட்ரூடோ:
கனடா நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ 2,60,000 டாலர் சம்பளத்தை பெற்று வருகிறார். தமிழர்களுக்கு மிகவும் பிடித்த தலைவரான இவர் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

ஏஞ்சலா மெர்கல்:
உலகின் சக்தி வாய்ந்த பெண்ணாகவும், ஜெர்மனி நாட்டின் அதிபராகவும் திகழும் ஏஞ்சலா மெர்கல் 2,42,000 டாலர் சம்பளத்தை பெற்றுவருகிறார்.

இம்மானுவேல் மேக்ரான்:
பிரான்ஸ் நாட்டின் அதிபரான இமானுவேல் மேக்ரான் அதிக சம்பளம் பெறும் அதிபர்கள் பட்டியலில் 5வது இடத்தை அடைந்திருக்கிறார். வருடத்திற்கு இவர் 2,20,656 டாலர் சம்பளத்தை பெறுகிறார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்