சச்சின் சொன்னதை செய்து காட்டுவாரா கோஹ்லி?

0
736

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கோஹ்லி என்னுடைய 49 சதங்கள் சாதனையை முறியடிக்கும்போது என் கையாலேயே அவருக்கு பரிசு தருவேன் என சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சதத்தில் சதம் என பல சாதனைகளை புரிந்திருக்கிறார். தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, சச்சினின் சாதனைகளை வேகமாக விரட்டி வருகிறார்.

நானூற்று அறுபத்து மூன்று ஒரு நாள் போட்டிகளில் கலந்துகொண்ட சச்சின் 49 சதங்களை வென்றிருந்தார். ஆனால் கோஹ்லியோ இப்போதே 35 சதங்களை தொட்டுவிட்டார். இன்னும் 15 சதங்கள் அடித்தால் சச்சினின் சாதனைகளை முறியடித்துவிடுவார்.

ஒரு நாள் போட்டியில் கோஹ்லி 50வது சதத்தை தொடும்போது, நான் என் கையாலேயே அவருக்கு பரிசு தருவேன். வெறும் சாம்பியன் பாட்டிலை அனுப்பி வாழ்த்து தெரிவிக்க மாட்டேன். அந்த பரிசை மைதானத்திலேயே ரசிகர்களின் ஆக்ரோஷ கோஷங்களுக்கு மத்தியில் கோஹ்லிக்கு வழங்குவேன் என சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார்.