ஓடி ஓடி விளையாடிய எஸ்.வி சேகர் நிஜமாவே காமெடியனா? இல்ல வில்லனா?

0
17

எஸ், வி சேகர் என்று சில மாதங்களுக்கு முன்னாடி சொன்னால் எல்லாருக்கும் அவருடைய காமெடிப் படங்கள்தான் ஞாபகம் வரும். ஆனால் இன்று அவரைப் பற்றிக்
கேட்டால் கைது செய்ய முடியாதபடி(?) ஊர் சுற்றிக் கொண்டிருப்பதுதான் ஞாபகம் வரும்.

சில மாதங்களுக்கு பின் பெண் நிருபரின் கன்னத்தை தட்டிய தமிழக ஆளுநர் விவகாரத்தில் அவரே மன்னிப்பு கேட்டபின், ஆளுநருக்கு ஆதரவாக பேசினார் எஸ். வி சேகர்.

ஆள நருக்கு ஆதரவாய் பேசினால் கூட பரவாயில்லை. பெண் நிருபர்களை அருவருக்கத்தக்க வசனங்களால் விமர்சித்தார். பெண் நிருபர்கள் தங்களுடைய உயர்
நிர்வாகிகளிடம் அட்ஜஸ்ட் செய்துதான் வேலையே பார்க்கறார்கள் என்று மட்டமான எண்ணத்தை இழிவான எழுத்தால் அவருடைய ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டார்.
இது பத்திரிக்கையாளர்களிடம் பெரும் அதிருப்தியையும், கோபத்தையும் உண்டாக்கியது.

இதற்கிடையில் அவரை கைது செய்யச் சொல்லி வழக்கு போடப்பட்டபோது அவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் முன் ஜாமின் விடுத்தார். அதனை உயர் நீதிமன்ற நீதிபதி நிராகரித்து, அவருக்கு கண்டனமும் தெரிவித்தார்.

அதன் பின் உச்ச நீதி மன்றத்திலும் அவர் முன்ஜாமின் கோரினார். அங்கேயும் முன்ஜாமினை நிராகரித்து, அவர் மீது கைது செய்ய வித்திருந்த தடையையும் நீக்கி, கைது செய்ய உத்தவிட்டிருந்தது.

இந்நிலையில் அவர் தலைமறைஆக இருந்தாலும், அவ்வப்போது போலிஸ் பாதுகாப்புடனேயே எல்லா இடங்களுக்கும் சென்று வந்து கொண்டிருந்தார். அவரை ஏன் இன்னும் காவல்துறை கைது செய்யவில்லை என எல்லாருக்கும் கேள்வி இருந்தது.

மேலும் சென்னை எழும்பூர் நீதி மன்றம் இன்று -20 ஆம் தேதி ஆஜராக உத்தவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் எஸ். வி. சேகர் தகுந்த பாதுகாப்புடன் இன்று எழும்பூர் நீதி மன்றத்திற்கு வந்தார்.

ஆனால் பயம் கருதி, நீதி மன்றத்தின் பின் வாசல் வழியாக வந்தர். இதனை நெட்டிஸன்கள் கலாய்த்தபடி மீம்ஸ் போட்டபடி வருகின்றனர்.இப்ப சொல்லுங்க , இவர் காமெடியனா? வில்லனா?

SHARE