ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அதிரடி மாற்றம்!

0
542

விஷால், தீபா வேட்பு மனு சர்ச்சைகளால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிகாரி வேலுச்சாமி மாற்றப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றன.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21 ஆம் தேதி அறிவித்த தேர்தல் ஆணையம் அதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்துவிட்டது. தற்போது அந்த தோகுதில் வேட்புமனு தாக்கல் செய்த நடிகர் விஷால் மற்றும் தீபாவின் மனுக்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டன. தீபாவின் மனு சாரியாக நிரப்படவில்லை என்றும், விஷால் முன்மொழிந்த வாக்களர்களின் கையெத்து போலியானவை என்றும் கூறி மனு தள்ளுபடி செய்தார் தேர்தல் அதிகாரி வேலுசாமி.

இதனால் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் வேட்புமனு ஏற்க்கப்டும் என்று தெரிவித்து பின்னர் 11 மணி அளவில் மீண்டும் நிராகரித்தனர் தேர்தல் அதிகாரி. இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகர் விஷால் ட்விட்டர் மூலம் ஜனாதிபதிக்கும் பிரதமர் மோடிக்கும் புகார் தெரிவித்துள்ளார். இத்தனை சர்ச்சைகளுக்குக் காரணமான தேர்தல் அதிகாரி வேலுச்சாமி மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.