பாலூட்டும் தாய்மார்கள் காரமான உணவை சாப்பிட்டால் குழந்தையை பாதிக்குமா?

0
8

நமது ஊரில் சொல்வதுண்டு. பாலூட்டும்போது இதைச் சாப்பிடாதே, அதைச் சாப்பிடாதே. குழந்தைக்கு வயித்து வலிக்கும் என பெரியவர்கள் சொல்வார்கள்.

இது முற்றிலும் உண்மையா என மருத்துவர்களிடமும், டயட்டீஷனிடமும் கேட்டபோது அவர்கள் சொன்னதுதான் இங்கே கட்டுரையாக சொல்லப்பட்டுள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பாலூட்டும் தாய் சாப்பிடும் உணவு தாய்ப்பாலின் சுவையை மாற்றும் என்பது உண்மையே. உதாரணத்திற்கு பூண்டு அதிகம் சாப்பிடும் தாயிற்கு தாய்ப்பாலின் ருசி வேறு மாதிரியாக இருக்கும்.

சுவை மாறுபடும் :

நன்றாக பால் குடிக்கும் குழந்தை திடீரன குடிக்க மறுப்பது சுவை மாறுபடுவதாலாகவும் இருக்கலாம். ஆனால் அதற்காக தாய்மரகள் இதைத்தான் சாப்பிட வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் எல்லாம் தேவையில்லை. தகுந்த டயட்டும் தேவையில்லை.

நார்மலாக எல்லாரும் சாப்பிடும் சாப்பாட்டையே சாப்பிடலாம். வாய்வு தரும் உணவை சாப்பிடுகார உணவினை சாப்பிடலாமா?வதை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இவை குழந்தைக்கும் வாய்வுத் தொந்தரவை தரும். இதனால் குழந்தை அழ நேரிடுகிறது.

கார உணவினை சாப்பிடலாமா?

சில இடங்களில் கார உணவைத்தான் விரும்பி சாப்பிடுவார்கள். கார உணவை சாப்பிடுவதால் குழந்தையை பாதிக்கும் என்று இதுவரை யாரும் நிருபித்ததில்லை. அவரவர் அனுபவத்தில் இதனை உணர்ந்து கொள்வது நலம்.

எப்படி கண்டுணர்வது :

நீங்கள் கார உணவை சாப்பிடதும், குழந்தை கீழ்கண்ட பிரச்சனைகளை தவிர்த்தால் கார உணவை தவிர்த்துவிடுங்கள்.

நீண்ட நேரம் குழந்தை அழ நேரிட்டால்,குழந்தை நீண்ட  நேரம் நெளிந்து கொண்டு சிணுங்கினால்,பச்சை நிறத்தில் மலம் வெளிப்பட்டால், சருமத்தில் அலர்ஜி ஏற்படுதல் போன்றவை ஏற்படுகிறதா எனப் பார்க்க வேண்டும்.

இந்த பிரச்சனைகள் குழந்தைக்கு உண்டானால் கார உணவுகளை தவிர்த்துடுங்கள். இல்லையென்றால் தாரளமாக மிதமான கார உணவுகளை சாப்பிடலாம்.

எப்படி இருந்தாலும் குழந்தைக்கு ஒத்துப் போகும் உணவு, ஒவ்வாத உணவு போன்றவற்றை அம்மாக்கள்தான் அனுபவத்தில் தெரிந்து கொள்வதுதான் நலம்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்