பல நூற்றாண்டுகளாக சபிக்கப்பட்ட கிராமம்- கூட்டமாக தொலைந்த மக்கள்!! எங்கே தெரியுமா?

0
10

வட இந்தியாவில் ராஜஸ்தான் அருகில் நடந்த உண்மையான கதை இது. குல்தாரா
கதை என்றால் தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.

பல நூறாண்டுகளுக்கு முன் செல்வமும், செல்வாக்கும் கொழித்துக் கொண்டிருந்த
கிராமங்கள் அவை. ஒட்டுமொத்த 84 கிராமங்களிலிருந்த மக்கள் ஒரே இரவில்
காணாமல் போய்விட்டனர்.

குல்தாரா :

மேற்கு ராஜஸ்தானிலிருந்து ஜைசல்மர் நகரத்திற்கு அருகில் இருக்கும் கிராமம்தான்
குல்தாரா. அங்கிருக்கும் வீடுகளின் அமைப்பும், விளைச்சலும் செல்வாக்கு மிக்க ஊராக
இருந்து வந்திருக்கின்றது.

குல்தார மிகப்பெரிய கிராமம். மொத்த 84 குக்கிராமங்களை உள்ளடக்கியது. 1291 ஆம்
ஆண்டு, அங்கு வசித்த பலிவால் பிராமண சமூகம் குல்தாரா விர்வாக்கம் செய்யப்பட்டது.

அங்கு பலிவால் பிராமண சமூகம் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்தது. ஆனால் அங்கு
வசித்த அத்தனை பேரும் ஒரே இரவில் 1825 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த கிராமங்களும்
காலி செய்து கொண்டு போயின. 7 நூற்றாண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து வந்த அவர்கள்
திடீரன எங்கு எதற்காக சென்றனர் என எவருக்கும் புலப்படவில்லை.

காரணம் :

அங்கு வசித்த மன்னர் ஒருவர் அந்த கிராமத்தின் தலைவரின் மகள் மீது ஆசை
கொண்டார். அவரை மணமுடிக்க அந்த தலைவரை தொடர்பு கொண்டார். ஆனால் அவர்
மறுக்கவே, குறிப்பிட்ட நாளுக்குள் முடிவை சொல்லவேண்டும்., இல்லையென்றால்
அவரது மகளை தூக்கிக் கொண்டு போய்விடுவதாக கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.

மறைந்த மனிதக் கூட்டம் :

அந்த குறிப்பிட்ட நாளுக்கு முன் என்ன செய்வதென்று அனைத்து கிராமங்களும் முடிவு
செய்து அந்த நாளின் இரவில் காலி செய்து கொண்டு போய்விட்டனராம்

ஆனால் அவர்கள் எங்கு சென்றார்கள், எங்கு வசித்தரகள் என்று எந்தவித வரலாற்றுத்
தகவல்களும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. யாரும் அவர்களை பார்த்ததாக செய்திகள் வரவில்லை.

சாபம் :

அதோடு அந்த கிராமத்தில் யாரும் சென்று தங்கவோ வசிக்கவோ முடியவில்லை. அந்த சமூகத்தின் சாபம் அங்கு இன்னும் நிலவுவதாக கூறப்படுகின்றது. இப்பவும் அதே
சிதிலமடைந்த ரூபத்திலேயே அந்த கிராமங்கள் பல நூறு ஆண்டுகள் ஆனாலும்
அப்படியே இருக்கின்றது.

சுற்றுலாத்தலம் :

இன்று இந்த கிராமம் சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. ராஜஸ்தான் அரசு இதனை
கலாச்சாரத்தின் சின்னமாக பாதுகாத்து வைத்திருக்கிறது. இங்கு செல்வதற்கு விமான
மற்றும் பேருந்து வசதிகள் இருக்கின்றன. விமானத்தின் மூலமாக செல்ல
வேண்டுமானால் ஜோத்பூர் செல்ல வெண்டும். ஜெய்சல்மர் நகரத்தில்ருந்து 18 கிலோ
மீட்டர் தூரத்தில் இந்த கிராமம் இருக்கின்றது.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்