ரஜினியால் ஏற்பட்ட 4 முக்கிய அரசியல் நகர்வுகள்… என்னாச்சு தெரியுமா?

0
1048

ரஜினிகாந்த் தீவிர அரசியலில் ஈடுபட போவதாக கூறியிருக்கும் இந்த வேளையில், அவரது முந்தைய கால பேச்சுக்களால் தமிழக அரசியலில் ஏற்பட்ட நான்கு முக்கிய நகர்வுகளை தெரிந்துகொள்வோம்.

 

ரஜினியால் ஏற்பட்ட 4 அரசியல் நகர்வுகள்... என்னாச்சு தெரியுமா?முதல் நகர்வு:
1995ம் ஆண்டு ‘பாட்ஷா’ பட விழாவில் பேசிய ரஜினிகாந்த், தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவி இருப்பதாகவும், அதற்கு தமிழக அரசுதான் பொறுப்பு எனவும் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் முன்னிலையிலேயே பகிரங்கமாக பேசினார். இதையடுத்துதான் ரஜினிகாந்தை மையமாக வைத்து அரசியல் பேச்சுக்கள் எழுந்தன.

 

ரஜினியால் ஏற்பட்ட 4 அரசியல் நகர்வுகள்... என்னாச்சு தெரியுமா?இரண்டாம் நகர்வு:
காங்கிரஸில் இருந்து அதிருப்தியுடன் வெளியேறிய மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் ஆதரவு கொடியை பறக்கவிட்டார். அப்போதுதான் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என பேசினார். இந்த பேச்சுதான் தி.மு.க. – த.மா.க. கூட்டணிக்கு அமோக வெற்றியை பெற்றுத் தந்தது. ஜெயலலிதா பெரும் தோல்வியை சந்தித்தார்.

 

மூன்றாம் நகர்வு:
1998ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தார் ரஜினிகாந்த். ஆனால் மக்கள் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அதிமுக அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து ரஜினி அரசியல் நாட்டத்தை குறைத்துக்கொண்டார்.

 

ரஜினியால் ஏற்பட்ட 4 அரசியல் நகர்வுகள்... என்னாச்சு தெரியுமா?நான்காம் நகர்வு:
2004ல் ரஜினி ரசிகர்களுக்கும், பா.ம.க.வினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து, பா.ம.க.வை எதிர்த்து வாக்களிக்குமாறு ரஜினி ரசிகர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால் இம்முறையும் ரஜினியின் வாய்ஸ் எடுபடவில்லை.

ரஜினிகாந்த்ஐந்தாம் நகர்வு:
2017 டிசம்பர் 31ம் தேதியான இந்நாளில் தீவிர அரசியலில் இறங்குவதுடன், தனிக்கட்சி அமைக்க உள்ளதையும் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.