சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பரான 3 அரசியல் திட்டங்கள்!

0
9943

2018 புத்தாண்டிற்கான பரிசாக ‘நான் அரசியலில் தீவிரமாக இறங்குகிறேன்’ என்ற அறிவிப்பை வெளியிட உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தன்னுடைய இயக்கத்திற்கு ரஜினி பேரவை என பெயரும் இட்டு வெற்றிகரமாக முன்னடத்திச் செல்ல உள்ளார் அவர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி 9 சுவாரசிய தகவல்கள்!படை திரளும்:
இதுநாள் வரை மற்ற கட்சிகளில் இணைந்திருந்த ரஜினி ரசிகர்கள் எல்லோரும் ரஜினியின் பேரவையில் ஓடோடி வந்து இணையப் போகிறார்கள். ரஜினியின் அரசியல் அமைப்பில் மக்களை இணைக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில்நுட்பக் குழு இயங்கப் போகிறது.

ரஜினியால் ஏற்பட்ட 4 அரசியல் நகர்வுகள்... என்னாச்சு தெரியுமா?ஆறிலிருந்து அறுபது வரை:
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அதில் இணையவும், இணைக்கவும் பல இடங்களில் இப்போதே தயாராக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

கட்சி சின்னம்:
ரஜினி ஏற்படுத்த இருக்கும் கட்சியின் கொடி, சின்னம் குறித்து பின்னாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம். இருப்பினும் அதுவரை பாபா முத்திரை ரஜினியின் அறிவிக்கப்படாத சின்னமாக திகழும்.

உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்… உயிர் வாழ்ந்தால் இங்கேதான் ஓடிவிடமட்டேன்…’ என்ற ரஜினியின் பாடல் உண்மையாகவே பலிக்கப்போகிறது. ரஜினிகாந்த் நாளைய தலைவர் இல்லை; இன்றைய தலைவர்.

 

ரஜினியுடன் அரசியலில் நுழைய இருக்கும் 7 பிரபலங்கள்!

உங்க கருத்தை தெரிவிக்கலாம்