கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே!

0
192

கார்த்திக் சுப்புராஜ்ஜின் இயக்கத்தில் ரஜினிகாந்துடன், பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இரண்டு படங்கள்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘2.0’ மற்றும் ‘காலா’ படங்கள் வெளியீட்டிற்காக காத்து நிற்கின்றன. இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்க கார்த்திக் சுப்புராஜ் தயாராக இருக்கிறார் என்றும் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளது என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. சூட்டோடு சூடாக அறிவிப்பும் வெளியிடப்பட்டிருக்கிறது.

கார்த்திக்-ரஜினி:
‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ ‘இறைவி’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் என்ற இளம் இயக்குனர் ரஜினியை இயக்குகிறார் என்பதுதான் ஹாட்-டாப்பிக். ‘கபாலி’ படத்திற்கு முன்னதாகவே கார்த்திக் – ரஜினிகாந்த் படம் பற்றி சலசலப்பாக பேசப்பட்டது. ஆனால் அப்படியே மறைந்து போனது இந்த காஸிப்.

தீபிகா ஒப்பந்தம்:
தற்போது அதிகாரப்பூர்வ தகவல்கள் உறுதியாகியுள்ள நிலையில், ரஜினிகாந்துடன், பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே தீபிகா, கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார் எனினும் அப்படம் தொழில்நுட்ப ஓவர்ஃப்ளோ காரணமாக புறக்கணிக்கப்பட்டது. தீபிகாவின் உருவமும் அதில் மோசமாக காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழில் மீண்டும் பிரபுதேவாவுக்கு மார்க்கெட்டை கொண்டுவர தற்போது ‘மெர்குரி’ என்ற படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். இப்படம் வரும் ஏப்ரல் 13ம் தேதியன்று வெளியாக உள்ளது.